பிற மொழியாக்கம் தமிழுக்குத் தரும் ஊக்கம்

 

 

 

 

 

 

 

 

நா. நந்திவர்மன்,பொதுச்செயலாளர் திராவிடப்பேரவை

“177 வருடக் கருவூலம் ரோமன் ரோலண்டு நூலகம்” என்ற தலைப்பில்
9 அக்டோபர் 2004‟ நியு இந்தியன் எக்சுபிரசு‟ ஆங்கில நாளேட்டில் நான்
எழுதுகையில் 338304 நூல்கள் அந்நூலகத்தில் அதில் இருந்தன. அதில் 45000 நூல்கள் சிதலமடைந்துவிட்டன. சில புதிய நூல்கள் அவற்றுள் அழிந்தவைக்கு மாற்றாக வாங்கப்பட்டிருந்தன. புதுச்சேரியைச் சுற்றி உள்ள 54 அரசு நூலகங்களில் 430000 நூல்கள் இருந்தன. அதில் 35000 சீரழிந்துள்ளன” என எழுதி இருந்தேன்.

காலம் காட்டும் கைவரிசையில் இருந்து மிச்சமிருக்கும் நூல்கள் அழிவதற்குள் இந்த ஒரு நூலக நூல்களை ஆய்வு செய்து மொழிபெயர்ப்புகள்-மொழி பெயர்ப்பாளர்கள் மட்டுமல்ல புதுவையில் வாழ்ந்தோர் இங்கு வந்த பிற நாட்டறிஞர்கள் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பை பதிவு செய்ய போதிய காலம் வேண்டும். பொறுமை மிக வேண்டும். ஈடுபாடு உள்ள ஆய்வாளர்கள் கண்ணுங் கருத்துமாக இப்பணியில் ஈடுபடல் வேண்டும்.

“இங்கு ஏராளமான பிரெஞ்சு நூல்கள் இருந்தன. விடுதலைக்குப் பிறகு பிரெஞ்சின் இடத்தை ஆங்கிலம் கைப்பற்றியதால் அரிய பல பிரெஞ்சு நூல்கள் கவனிப்பாரற்றுப் போயின. திருமதி ஒய்யோன் ராபர்ட் கெப்லே  அரிய நூற்கள் பட்டியலை அரும்பாடு பட்டித் திரட்டி இருந்தார். புதுச்சேரி அரசு 1960ல் Catalogue General என்ற தலைப்பில் அந்தப் பட்டியலை வெளியிட்டிருந்தது. அந்நூல் மீண்டும் புதுவையில் பதிக்கப்பட்டாக வேண்டும்” என மேற்சொன்ன கட்டுரையில் நான் எழுதி இருந்தேன். ஆய்வுக்கு இதுபோன்ற பட்டியவர்கல் அருந்துணை புரிவன.

புதுச்சேரி அரசுக்கும் நடுவண் அரசுக்கும் சுலை 1-1979 ல் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாக தேசிய ஆவணக்காப்பகம் புதுச்சேரிக்கு வந்தது. பிரெஞ்சுக்காரர்கள் அரிய ஆவணங்களைப் பாதுகாப்பதில் நமக்கு முன்னோடிகள்.  பிரெஞ்சியர் கையாண்ட பாதுகாப்பு முறையை Archives Between Glasses என ஆங்கிலத்தில் சொல்லலாம். கண்ணாடிக்கிடையே ஆவணங்கள் கிழிபடாமல் பாதுகாக்கும் முறைப்படி பிரெஞ்சு தமிழ் தெலுங்கு இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் ஆனந்தரங்கப்பிள்ளைக்கும் சென்னை வணிகர் சம்புதாஸ் சங்கரதாசுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்து கண்ணடிகளுக்கிடையே வைக்கப்பட்டு மூடி வெளியே எடுத்திடாமல் படித்தறியும் வண்ணம் உள்ளன 1701-1860க்கிடையே ஆன இந்த ஆவணங்களில் குறிப்பாக ஆனந்தரங்கரின் கடிதங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் வரலாறு வெளிப்படும் என ஆகத்து 20-2005 நியு இந்தியன் எக்சுபிரசு ஆங்கில நாளேட்டில் Treasure Trove of History என்ற தலைப்பில் நான் எழுதினேன்.

இந்த தேசிய ஆவணக் காப்பகத்தில் திருமூலரின் நாடி சாத்திரம் யாபருங்கலம் தத்துவக் கட்டளை பட்டினத்தார் மடல் வைத்திய சாத்திரம் அகத்தியர் நூறு நாதாந்தசாரம் ஆகிய அரிய நூல்கள் ஓலைச் சுவடிகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடகத் தந்தை  சங்கரதாஸ் சுவாமிகள் (1867-1922) எல்லா இசை மரபுகளையும் தமிழ்நாடகத்துள் கொண்டு வந்தவர். கிறித்துவப் பாதிரியாரான எட்டுவர்டு பால் மேற்கத்திய பக்திப் பனுவல்களை மேற்கத்திய இசையில் பாடும் வண்ணம் எழுதித் தருமாறு வேண்ட சுவாமிகளும் யாத்தளித்தார்.

“கோபாலகிருண பாரதியின் காலத்தில்தான் 19ஆம் நூற்றாண்டில் கர்நாடக இசையில் இந்துஸ்தானி இசை வடிவங்கள் நுழைந்தன” என முனைவர் அரிமளம் பத்மநாபன் கூறுவார்” “அவர் நந்தன் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியபோது தமிழிசை மரபு புத்தொளி பெற்றது. அவர் வழியிலேயே அவர் கையாண்ட இசை மெட்டுக்களின் தழுவலாக மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் பாடினார். அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் திருப்பாவையையும் திருவெம்பாவையும் தமிழிசை வழக்கில் கொண்டு வந்தார். தமிழிசையை வளர்க்கவும் பரப்பவும் பெருவிழைவு கொண்டிருந்த பாவேந்தர் பாரதிதாசன் தெலுங்குப் பண்டிதர்களின் துணையோடு தியாகராஜரின் கிர்த்தனைகளை தமிழாக்கம் செய்தார். சனி தோடி தேவே ஓ மனசா என தியாகராஜன் அரிகரகாம்போதி ராகத்தில் எழுதிய பாடலை தாதி கூட்டி வாராய் ஓ மனமே” எனப் பாவேந்தர் மொழியாக்கம் செய்ததை” முனைவர் அரிமளம் பத்மநாபன் கூறுவார். இதை Tamil Music Through Ages என்ற தலைப்பில் நியு இந்தியன் எக்சுபிரஸ் நாளேட்டுக்கு 12-பிப்ரவரி-2005ல் நான் எழுதிய கட்டுரையில் பதிவு செய்துள்ளேன்.

பிரெஞ்சு தேசிய கீதத்தை மொழியாக்கம் செய்த மகாகவி பாரதியார் தெலுங்குக் கீர்த்தனைகளைத் தமிழாக்கம் செய்த பாவேந்தர் பாரதிதாசன் என தமிழ்மொழியின் முன்னோடிக் கவிஞர்கள் இருவர் ஆற்றிய பங்களிப்பும் மொழி வளர்ச்சிக்குப் புதுவையின் பங்களிப்பில் அடங்கும். சிறீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் ஏட்டின் வழி மொழியாக்கம் மூலம் தமிழ் வளர்த்தச் சான்றோர் பலராவர்.

 பாவேந்தர் பாரதிதாசன் ஆசிரியராத் திகழ்ந்த சிறீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் பங்குனி 1935 திங்களிதழில் ல்லி என்ற மாபெரும் அங்கிலக் கவிஞனின் கவிதையை எம்.ஜே.ஈ.என். டீ.யு என்பவர் புதவைக்காரர் மொழியாக்கம் செய்துள்ளார்.

 பிரான்சு நாட்டுக் கவிஞர் புளோரியான் எழுதிய கவிதையின் தழுவலாக குருடனும் முடவனும் என்ற பாடலை அதே இதழில் “தமிழணங்கு” ஆசிரியர். புலவர் மு.த.வேலாயுதனார் எழுதியுள்ளார்.

 த்ஸனிதோடி என்ற தியாகராஜ கீர்த்தனத்தின் மொழிபெயர்ப்பும் பங்குனி 1935 கவிதா மண்டலத்தில் வெளியாகி உள்ளது.

ஆங்கிலக் கவிஞன் n~ல்லி எழுதிய பாடலை “என் பக்கத்தில் இன்னோர் இருதயம் இருந்திருந்தால் இனிமையாயிருக்கும்” என்ற தலைப்பில் எம் ஜே.ஈ.நல்பொன் பி.ஏ.எல்.டி தமிழாக்கம் செய்துள்ளார் (சித்திரை 1935 கவிதா மண்டலம்)

“கஸ_ தாரஸபான முஜேசி” என்ற தியாகராஜ கீர்த்தனையை சித்திரை 1985 கவிதா மண்டலம் இதழில் தமிழாக்கம் செய்துள்ளார் பாவேந்தர்.

“யுத்தம் வராதா என்று ஏராளமான போர்க் கருவிகளைச் செய்து குவித்துக் கொண்டு காத்திருக்கின்றனர் ஆயுதத் தொழிற்சாலையினர். அவர்கள் உடனே உலகில் போர் ஒன்று ஏற்பட வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திப்பதாக ஒரு ஆங்கிலக் கவி” எழுதிய பாடலைத் தழுவி யுத்தம் வராதா என்ற தலைப்பில் சங்கு சுப்பிரமணியன் எழுதிய கவிதை கவிதா மண்டலத்தில் வெளியாகியுள்ளது.

பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் பன்மொழிகளில் மொழியாக்கம்
செய்யப்பட்டன. அது பற்றிக் கவிதா மண்டலத்தில் எழுதும் எஸ்.ஆர்.சுப்பிரமணியன் “சுப்பிரமணிய பாரதியார் கவிதா மண்டலம் ஆசிரியர் பாரதிதாசன் சுமார் 20 ஆண்டுகளாக எழுதி வெளியிட்டு வந்துள்ள தமிழ்க்கவிகளில் அநேகம் இங்கிலீ தெலுங்கு முதலிய பாi~ வல்லுநர் தமது பத்திரிகையில் மொழி பெயர்த்து வெளியிட்டு வந்துள்ளார்கள். பாரதிதாசன் முதன் முதலில் பாரதியார் முன்னிலையில் அவர் கட்டளைப்படி எழுதிய சக்திப்பாட்டு ஒன்றை  Bombay Standard என்ற சிறந்த இங்கிலீ~; பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் கே. சீனிவாசன் அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டார்” என்று எழுதியுள்ளார். The Mothers Majesty-Manifestations of Primal Power –என்ற தலைப்பில் அக்கவிதை கவிதா மண்டலத்தில் வெளியாகியுள்ளது.

இச்செய்தி மூலம் “தெலுங்கில்” மொழியாக்கம் செய்யப்பட்ட பாவேந்தர் பாடல்கள் பற்றி அறிகிறோம். ஆய்வாளர்கள் அந்தப் பாடல்களைத் திரட்டித் தொடுக்கும் பணியில் ஈடுபடல் வேண்டும்.

ரூழே தெலீஸ் என்பார் “பிரெஞ்சு தேச மக்களைப் போருக்குக் கிளப்பிய மார்செயேன் என்ற எழுச்சிப் பாட்டானது உலகத்திலேயே கீர்த்தி பெற்றதுவாகும் என்று “தூக்குவீர் கத்தியை” என்ற தலைப்பில் தமிழாக்கியுள்ளார்.

சல்லி ப்ருய்தோம் என்ற பிரஞ்சுக் கவிஞரின் பாடலை வழக்கறிஞரான எஸ்.நடனசபாபதி „ஓர் கனவு‟ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்துள்ளார்.

 ஆங்கிலக் கவிஞன் கீட்ஸ் எழுதிய கவிதையை அழுகுடைப் பொருள் என்ற தலைப்பில் கே. பஞ்சாபகேசய்யர் பி.ஏ.எல்.டி என்ற ஆசிரியர் தமிழாக்கம் செய்தள்ளார்.

 சிறீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் வைகாசி 1935 இதழில் பெண்களைப் பற்றி பெர்னாட்~h என்ற கவிதை வெளியாகி உள்ளது.  பிரஞ்சுக் கவிஞர் விக்தோர் உய்கோ எழுதிய ஏழைகளுக்கு என்ற கவிதையைத் தழுவி பெரும் புலவர் மு.த. வேலாயுதனார் தமிழாக்கம் செய்துள்ளார்.

“அலக லல்ல லாடக நி” என்ற தியாகராஜ கீர்த்தனையை பாவேந்தர்
பாரதிதாசன் தமிழாக்கம் செய்துள்ளார்.

எச். டபிள்யூ லாங்ஃபெல்லோ என்ற ஆங்கிலக்விஞரின் கவிதையை குழந்தைகள் என்ற தலைப்பில் தமிழாக்கிக் கவிதா மண்டலம் வெளியிட்டது.

சிறீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் ஆனி மாதம் 1935 இதழில் “ச்யாம சுந்தராங்க” என்ற தியாகராஜரின் கீர்த்தனையை பாவேந்தர் தமிழாக்கம் செய்துள்ளார்.

பிரெஞ்சுக் கவிஞர் ப்ளோரியான் எழுதிய கவிதையை “செம்மறியாடும் நாயும்” என்ற தலைப்பில் பெரும்புலவர் மு.த. வேலாயுதனார் மொழியாக்கம் செய்துள்ளார்.”

சல்லி புரூய் தொம் என்ற பிரஞ்சுக் கவிஞரின் கவிதையை சிறீ பஸ்தேருக்குக் கடிதம் என்ற தலைப்பில் எஸ். நுடனசபாபதி மொழி பெயர்த்துள்ளார்.

விக்தோர் உய்கோ எழதிய “காதல்” என்ற கவிதையையும் நடனசபாபதி மொழி பெயர்த்துள்ளார்.  கவிதா மண்டலம் : ஆவணி 1935 இதழில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் “நிஜமர்மமுலனு” என்ற தியாகராசர் கீர்த்தனையை தமிழாக்கம் செய்துள்ளார்.

பிரிசோ என்ற பிரெஞ்சுக்கவி 5வயதுச் சிறுவனாக இருந்தபோது விளையாட்டாக நன்றாகப் பாடிக்கொண்டிருந்த வானம்பாடியைச் சுட்டு வீழ்த்தினர். கவிஞரானதும் அதை நினைவு கூர்ந்து வானம்பாடியின் மரணம் என்ற கவிதை இயற்றினார். அதைத் தமிழணங்கு ஆசிரியர் மு.த.வேலாயுதனார் தமிழாக்கம் செய்தார்.

மேக்கெய் என்ற ஆங்கிலப் பாவலன் பாடலைத் தழுவி “எனது நல்ல வலது கரம்” என்ற தலைப்பில் க. புருசோத்தமன் மொழியாக்கம் செய்தார்.

மாபெரும் ஆங்கிலக் கவிஞன் N~க்ஸ்பியர் எழுதிய வெனிசு நகர வணிகன் நாடகத்தின் தமிழ் மொழியாக்கம் தென்னாப்பரிக்கா டர்பன் நகரில் வாழ்ந்த ச. முனிசாமிப் பிள்ளையால் செய்யப்பட்டது. இந்நகரில் என் பாட்டனார் கோ. இராமதாசுப் பிள்ளையும் வாழ்ந்தார். இப்பாடல் சிறீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலத்தில் வெளிவந்ததால் புதுவையின் பங்களிப்பில் இடம் பெறுகிறது.“இரக்கத்தின் சிறப்பு” என்ற தலைப்பில் வெளியாகியது.

ஆந்திரே n~னியேவின் கருத்தைத் தழுவி பெரும் புலவர் மு.த.வேலாயுதனார் “சுதந்திரம்” என்ற தலைப்பில் கவிதை எழுதினார்.

“1851 ஆம் ஆண்டு திசம்பர் 2ம் நாள் மூன்றாவது நெப்போலியன் பிரான்சின் குடியாட்சியை முடியாட்சியாக்கிக் கொண்டு அரசனானான். அப்போது அவன் குடியரசுவாதிகளை நாடுகடத்தி விட்டான். நாடு கடத்தப்பட்டவர்களில் பிரெஞ்சு தேச மகாகவி விக்தோர் உய்கோவும் ஒருவர். அப்போது அவர் நாடுகடத்தப்பட்டவர்களின் வீட்டைப் பற்றி மிக உருக்கமாகப் பாடியதை” பின்னாளில் புதுவைச் சிவம் என்று அறிமுகமான ச. சிவப்பிரகாசம் அந்நாளில் துக்க வீடு என்ற தலைப்பில் பாடியுள்ளார்.

ரோன்சார் என்ற 16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சுக்கவி தாம் காதலித்த ஹெலன் என்பவள் தம்மை விரும்பவில்லை என்பதைத் அறிந்து கவிதையாக கடிதம் எழுதினார். அதன் தமிழாக்கத்தை வழக்கறிஞர் நடனசபாபதி எழுதியுள்ளளார்.

“மனஸா சிறீ ராமச்சந்த்ருனி” என்ற தியாகராஜ கீர்த்தனை கவிதாமண்டலம் இதழாசிரியர் பாரதிதாசனால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மொழியாக்க முன்னோடிகளாக மகாகவி பாரதியாரையும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனையும் பெற்றுப் புகழீட்டிய புதுவை மண்ணில் சிறீ சுப்பிரமணிய பாரதி கவிதாமண்டலம் என்ற ஒரே இதழில் இத்துணை மொழி பெயர்ப்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர். புதுவையில் வெளிவந்த சிற்றிதழ்கள் அனைத்தையும் அலசித் தேடினால் இன்னும் பலரது பங்களிப்பு பாரறியும்.

கேரளப் பெரியார் நாராயணகுரு புதுவையிலும் சிதம்பரத்திலும் வடலூரிலும் சில காலம் இருந்துள்ளார். அவர் சிதம்பரத்தின் அருமை பெருமைகளை வடமொழியில் “சிதம்பரா~;டகம்” என்ற நூலாக யாத்துள்ளார். புதுச்சேரியில் அவர் வேதபுரீசுவரர் மீது தமிழில் வெண்பாக்களால் ஒரு கவிதை நூலை இயற்றியுள்ளார். அந்நூல் மலையாள வரிவடிவத்தில் உள்ளது. ஒரு மலையாள அறிஞர் அதை வாசித்துக் காட்டியபோது தமிழ் வெண்பா என்பது எனக்குத் தெளிவாகியது. இதை மீட்டெடுத்துத் தமிழில் பதிப்பித்தாகல் வேண்டும் நியு இந்தியன் எக்சுபிரசில்  Narayana Guru and Tamil Soil  என்ற தலைப்பில் 13 ஆகத்து 2005ல் நானெழுதிய கட்டுரையில் இதனைப் பதிவு செய்துள்ளேன். மலையாள மொழிக்குரிய வரிவடிவம் புதுச்சேரியையோ இதனை ஒட்டிய தமிழகப் பகுதிகளிலோ இருந்த சமயத்தில் தான் துஞ்சத்து எழுத்தச்சனால் உருவாக்கப்ப்ட்டதாக அந்த மலையாள அறிஞர் என்னிடம் உரையாடுகையில் தெரிவித்து கருத்து ஆய்வு செய்யப்பட்ட வேண்டிய கருத்தாகும்.

“நரம்பிசைக் கருவிகள் அய்யாயிரமாண்டுகளாக இருந்து வந்துள்ளன.
அத்தகு நரம்பிசைக் கருவிகளுள் பழமையானது யாழ். இன்று இலங்கைக்குள் இருக்கின்ற யாழ்ப்பாணத்தில் தான் யாழ் உருப்பெற்றது. யாழ் போன்றதொரு இசைக்கருவியில் இருந்தே மேற்கத்திய இசைக்கருவி “கித்தார்” உருவாகி இருத்தல் வேண்டும். இது போன்ற நரம்பிசைக் கருவிகள் இலங்கையில் ஈரானில் நடுவண் ஆசியாவில் இருந்தன. அவற்றிலிருந்தே கித்தார் உருவானது. மேற்கத்திய “கித்தார்” இசைக்கருவியை ஒத்த கருவிகள் பற்றி சுசா குகை எழுத்தோவியங்களிலும் ரொனியச் சமவெளியில் கண்டு எடுக்கப்பட்டச் சிற்பங்களிலும் காண்கிறோம்.” என நான்  A Journey in Rhythem என்ற கட்டுரையில் நியு இந்தியன் எக்சுபிரசில் 10 செப்டம்பர் 2005 அன்று எழுதினேன்.

“கித்தார்” என்ற மேற்கத்திய நரம்பிசைக் கருவியின் பெயர் கீத் என்ற சமற்கிருதச் சொல்லில் இருந்தும் “தார்” tar என்ற பாரசீகச் சொல்லில் இருந்தும் உருவாயிற்று. பாரசீக மொழியில் “தார்” என்பது நரம்பைக் குறிக்கும். எனவே சமற்கிருதச் சொல்லும் பாரசீகச் சொல்லும் இணைந்து இசையில் சங்கமாயின. இப்படி Guitar என்ற நரம்பிசைக் கருவிக்குப் பெயர் உருவான விதம் பற்றி இசைக் கடல் – இலக்கணச்சுடர் இரா. திருமுருகன் கூறிய விளக்கம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டதால் நியு இந்தியன் எக்சுபிரசு வழி அனைவரும் அறிய முடிந்தது.

 மொழி பெயர்ப்புச் சிக்கல்களுக்கு அறிவியலும் தீர்வு தேட முற்பட்டுள்ள காலத்தில் வாழ்கின்றோம். “ஒவ்வொரு மொழிக்கும் பொருந்தக்கூடிய பொதுவான குறியீட்டு மொழியைக் கண்டெடுத்து அதன் மூலம் உலக மொழிகளுக்கிடையே மொழி பெயர்ப்புச் சிக்கல்களைத் தீர்த்து வைக்க அய்க்கிய நாடுகள் நிறுவனம் 1996 முதல் முயன்று வருகிறது. Universal Networking Language Project  என்ற அனைத்துலக மொழிகள் இணைப்புத் திட்டத்தில் இந்தியா உள்ளிட்ட 18 நாடுகள் தங்கள் பங்களிப்பை நல்கியுள்ளன. அரபி இத்தாலியன் பிரெஞ்சு ஸ்பானி~ போர்த்துகீசு ஆகிய மொழிகளுக்கும் அனைத்துலக இணைப்புக் குறியீட்டு மொழிக்கும் நல்ல இசைவு – இணக்கம் உருவாகிவிட்டது என 2004 ல் நான் எழுதினேன்.

 “குறியீட்டு மொழிக்கும் மேற் சொன்ன மொழிகளுக்கும் ஒத்திசைவு உள்ளதால் ஆங்கிலத்திலிருந்து குறியீட்டு மொழிககு மாற்றி அதிலிருந்துச் சில நொடிகளில் அரபி மொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்ய முடியும். போர்த்துகீசில் இருந்து பிரஞ்சுக்கும் இப்படிக் குறியீட்டு மொழியைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம். இந்த Universal Networking Language புதிய எசுபிராண்டோ என்று போற்றப்படுகிறது. எசுபிராண்டோ என்று அறிஞர்கள் கூடிச் செயற்கையாக ஒரு மொழியை உருவாக்கி இருந்தார்கள். அது போன்று புதிய குறியீட்டு மொழியும் பெயர்பெற்றது. மொழிபெயர்ப்புச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் இக்குறியீட்டு மொழி முதுகெலும்பாகத் திகழ்கிறது” என்று புவி வரலாறு முதல் புதுவை வரலாறு வரை உண்மைகளின் ஊர்வலம் – 8 என்ற தொடரின் 2004 ல் எழுதி இருந்தேன்.

“இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்புச் சிக்கல்களுக்குத் தீர்வு காண பொறி மொழியை – குறியீட்டு மொழியை நமது மொழிகளுடன் ஒத்திசைவு செய்ய அறிஞர்கள் முயன்று வருகின்றனர். மகாராட்டிர மாநிலம் போவையில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜிää கணினிகளுக்கு இந்தியும் மராத்தியும் கற்றுத் தரும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஒரு மொழியை அக்குவேறாகக் கழற்றிப் பார்த்து அடிப்படைக் கட்டமைப்பை புரிந்து கொண்டு கணினியின் பொறி மொழியுடன் பொருத்தும் பணியில் இந்தி மராத்திமொழிகள் வெகுவேகமாக ஈடுபட்டுள்ளன. உலகின் முதன்மொழிக்குச் சொந்தக்காரர்கள் உறங்கிக் கொண்டுள்ளார்கள்” என 2004 ல் சொன்னேன். 2012 ல் மீண்டும் நினைவூட்டுகிறேன்.

பிறமொழி அறிவை வளர்க்க குறிப்பாகப் பிரெஞ்சு மொழியை எளிதில் கற்க Moodle.org என்ற இலவய இணையதளத்தில் உள்ள திறந்தநிலை (open source) ஆவணத்தில் இருக்கும் மென்பொருளைப் பயன்படுத்தி புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் பிரெஞ்சுத் துறைத் தலைவர் ஜெயராஜ் டேனியல் அம்மொழியை கற்றுத்தரும் பாராட்டத்தக்க பணியில் ஈடுபட்டுள்ளார். படி இறக்கம் செய்யக்கூடியதாக உள்ள Moodle 2.0 மொழிச் சேவைப்படி 23 மொழிகளை 80 விழுக்காடு மொழியாக்கம் செய்ய முடியும். 12 மொழிகளை 60 விழுக்காடு  11 மொழிகளை 40  விழுக்காடு 52 மொழிகளை 40  விழுக்காட்டுக்கும் குறைவாகவும்  மொழி பெயர்ப்புச் செய்ய முடியும் என்ற நிலை நிலவுகிறது. தமிழை 70 விழுக்காடு மொழியாக்கஞ் செய்யக் கூடிய மென்பொருள் வந்துவிட்டது.

பிரெஞ்சு அரசின் தேசிய நூலகத்தில் வேறெங்கும் கிடைத்திடாத அரிய தமிழ் ஏடுகள் சுவடிகள்- நூல்கள்-மொழியாக்க நூல்கள் உள்ளன.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட “Dictionary of Technical Terms from English to Tamil  நூல் பற்றித் தமிழ்நாடு திட்டக்குழுத்
துணைத்தலைவராக விளங்கிய முனைவர். மு. நாகநாதன் விதந்து எழுதியுள்ளார்.

ஈடிணையற்ற இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் சிலருள் சிறப்பிடம் பெற்றப் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மருமகனும் புதுவைத் தாகூர் கல்லூரியின் மேனாள் மாணவத்தலைவருமான பக்தவத்சலம் என்ற ப. அருளி உருவாக்கிய அருங்கலைச் சொல்லகராதியே புதுவை மொழிபெயர்ப்பாளர்களில் அவரை முதலிடத்தில் கொண்டு சேர்க்கும் சிறப்புடையது.

மூன்று இலட்சம் அறிவியல்- பொறியியல்- கலைச் சொற்களைத் தமிழாக்கிய அறிஞர் ப. அருளியின் பங்களிப்பு மிகப்பெரிது போற்றற்குரியது. ஓவ்வொரு இலக்கியமும் அதன் மொழிபெயர்ப்பும் உலகப் பண்பாட்டுச் செழுமைக்கும் உறவுக்கும் எத்துணை தூரம் இன்றியமையாததோ அவ்வளவுக்கு அருங்கலைச் சொல் அகராதிகளும் மொழி வளர்ச்சிக்குப் பயன்படக் கூடியவை.

Leave a comment