பிற மொழியாக்கம் தமிழுக்குத் தரும் ஊக்கம்

 

 

 

 

 

 

 

 

நா. நந்திவர்மன்,பொதுச்செயலாளர் திராவிடப்பேரவை

“177 வருடக் கருவூலம் ரோமன் ரோலண்டு நூலகம்” என்ற தலைப்பில்
9 அக்டோபர் 2004‟ நியு இந்தியன் எக்சுபிரசு‟ ஆங்கில நாளேட்டில் நான்
எழுதுகையில் 338304 நூல்கள் அந்நூலகத்தில் அதில் இருந்தன. அதில் 45000 நூல்கள் சிதலமடைந்துவிட்டன. சில புதிய நூல்கள் அவற்றுள் அழிந்தவைக்கு மாற்றாக வாங்கப்பட்டிருந்தன. புதுச்சேரியைச் சுற்றி உள்ள 54 அரசு நூலகங்களில் 430000 நூல்கள் இருந்தன. அதில் 35000 சீரழிந்துள்ளன” என எழுதி இருந்தேன்.

காலம் காட்டும் கைவரிசையில் இருந்து மிச்சமிருக்கும் நூல்கள் அழிவதற்குள் இந்த ஒரு நூலக நூல்களை ஆய்வு செய்து மொழிபெயர்ப்புகள்-மொழி பெயர்ப்பாளர்கள் மட்டுமல்ல புதுவையில் வாழ்ந்தோர் இங்கு வந்த பிற நாட்டறிஞர்கள் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பை பதிவு செய்ய போதிய காலம் வேண்டும். பொறுமை மிக வேண்டும். ஈடுபாடு உள்ள ஆய்வாளர்கள் கண்ணுங் கருத்துமாக இப்பணியில் ஈடுபடல் வேண்டும்.

“இங்கு ஏராளமான பிரெஞ்சு நூல்கள் இருந்தன. விடுதலைக்குப் பிறகு பிரெஞ்சின் இடத்தை ஆங்கிலம் கைப்பற்றியதால் அரிய பல பிரெஞ்சு நூல்கள் கவனிப்பாரற்றுப் போயின. திருமதி ஒய்யோன் ராபர்ட் கெப்லே  அரிய நூற்கள் பட்டியலை அரும்பாடு பட்டித் திரட்டி இருந்தார். புதுச்சேரி அரசு 1960ல் Catalogue General என்ற தலைப்பில் அந்தப் பட்டியலை வெளியிட்டிருந்தது. அந்நூல் மீண்டும் புதுவையில் பதிக்கப்பட்டாக வேண்டும்” என மேற்சொன்ன கட்டுரையில் நான் எழுதி இருந்தேன். ஆய்வுக்கு இதுபோன்ற பட்டியவர்கல் அருந்துணை புரிவன.

புதுச்சேரி அரசுக்கும் நடுவண் அரசுக்கும் சுலை 1-1979 ல் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாக தேசிய ஆவணக்காப்பகம் புதுச்சேரிக்கு வந்தது. பிரெஞ்சுக்காரர்கள் அரிய ஆவணங்களைப் பாதுகாப்பதில் நமக்கு முன்னோடிகள்.  பிரெஞ்சியர் கையாண்ட பாதுகாப்பு முறையை Archives Between Glasses என ஆங்கிலத்தில் சொல்லலாம். கண்ணாடிக்கிடையே ஆவணங்கள் கிழிபடாமல் பாதுகாக்கும் முறைப்படி பிரெஞ்சு தமிழ் தெலுங்கு இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் ஆனந்தரங்கப்பிள்ளைக்கும் சென்னை வணிகர் சம்புதாஸ் சங்கரதாசுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்து கண்ணடிகளுக்கிடையே வைக்கப்பட்டு மூடி வெளியே எடுத்திடாமல் படித்தறியும் வண்ணம் உள்ளன 1701-1860க்கிடையே ஆன இந்த ஆவணங்களில் குறிப்பாக ஆனந்தரங்கரின் கடிதங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் வரலாறு வெளிப்படும் என ஆகத்து 20-2005 நியு இந்தியன் எக்சுபிரசு ஆங்கில நாளேட்டில் Treasure Trove of History என்ற தலைப்பில் நான் எழுதினேன்.

இந்த தேசிய ஆவணக் காப்பகத்தில் திருமூலரின் நாடி சாத்திரம் யாபருங்கலம் தத்துவக் கட்டளை பட்டினத்தார் மடல் வைத்திய சாத்திரம் அகத்தியர் நூறு நாதாந்தசாரம் ஆகிய அரிய நூல்கள் ஓலைச் சுவடிகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடகத் தந்தை  சங்கரதாஸ் சுவாமிகள் (1867-1922) எல்லா இசை மரபுகளையும் தமிழ்நாடகத்துள் கொண்டு வந்தவர். கிறித்துவப் பாதிரியாரான எட்டுவர்டு பால் மேற்கத்திய பக்திப் பனுவல்களை மேற்கத்திய இசையில் பாடும் வண்ணம் எழுதித் தருமாறு வேண்ட சுவாமிகளும் யாத்தளித்தார்.

“கோபாலகிருண பாரதியின் காலத்தில்தான் 19ஆம் நூற்றாண்டில் கர்நாடக இசையில் இந்துஸ்தானி இசை வடிவங்கள் நுழைந்தன” என முனைவர் அரிமளம் பத்மநாபன் கூறுவார்” “அவர் நந்தன் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியபோது தமிழிசை மரபு புத்தொளி பெற்றது. அவர் வழியிலேயே அவர் கையாண்ட இசை மெட்டுக்களின் தழுவலாக மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் பாடினார். அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் திருப்பாவையையும் திருவெம்பாவையும் தமிழிசை வழக்கில் கொண்டு வந்தார். தமிழிசையை வளர்க்கவும் பரப்பவும் பெருவிழைவு கொண்டிருந்த பாவேந்தர் பாரதிதாசன் தெலுங்குப் பண்டிதர்களின் துணையோடு தியாகராஜரின் கிர்த்தனைகளை தமிழாக்கம் செய்தார். சனி தோடி தேவே ஓ மனசா என தியாகராஜன் அரிகரகாம்போதி ராகத்தில் எழுதிய பாடலை தாதி கூட்டி வாராய் ஓ மனமே” எனப் பாவேந்தர் மொழியாக்கம் செய்ததை” முனைவர் அரிமளம் பத்மநாபன் கூறுவார். இதை Tamil Music Through Ages என்ற தலைப்பில் நியு இந்தியன் எக்சுபிரஸ் நாளேட்டுக்கு 12-பிப்ரவரி-2005ல் நான் எழுதிய கட்டுரையில் பதிவு செய்துள்ளேன்.

பிரெஞ்சு தேசிய கீதத்தை மொழியாக்கம் செய்த மகாகவி பாரதியார் தெலுங்குக் கீர்த்தனைகளைத் தமிழாக்கம் செய்த பாவேந்தர் பாரதிதாசன் என தமிழ்மொழியின் முன்னோடிக் கவிஞர்கள் இருவர் ஆற்றிய பங்களிப்பும் மொழி வளர்ச்சிக்குப் புதுவையின் பங்களிப்பில் அடங்கும். சிறீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் ஏட்டின் வழி மொழியாக்கம் மூலம் தமிழ் வளர்த்தச் சான்றோர் பலராவர்.

 பாவேந்தர் பாரதிதாசன் ஆசிரியராத் திகழ்ந்த சிறீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் பங்குனி 1935 திங்களிதழில் ல்லி என்ற மாபெரும் அங்கிலக் கவிஞனின் கவிதையை எம்.ஜே.ஈ.என். டீ.யு என்பவர் புதவைக்காரர் மொழியாக்கம் செய்துள்ளார்.

 பிரான்சு நாட்டுக் கவிஞர் புளோரியான் எழுதிய கவிதையின் தழுவலாக குருடனும் முடவனும் என்ற பாடலை அதே இதழில் “தமிழணங்கு” ஆசிரியர். புலவர் மு.த.வேலாயுதனார் எழுதியுள்ளார்.

 த்ஸனிதோடி என்ற தியாகராஜ கீர்த்தனத்தின் மொழிபெயர்ப்பும் பங்குனி 1935 கவிதா மண்டலத்தில் வெளியாகி உள்ளது.

ஆங்கிலக் கவிஞன் n~ல்லி எழுதிய பாடலை “என் பக்கத்தில் இன்னோர் இருதயம் இருந்திருந்தால் இனிமையாயிருக்கும்” என்ற தலைப்பில் எம் ஜே.ஈ.நல்பொன் பி.ஏ.எல்.டி தமிழாக்கம் செய்துள்ளார் (சித்திரை 1935 கவிதா மண்டலம்)

“கஸ_ தாரஸபான முஜேசி” என்ற தியாகராஜ கீர்த்தனையை சித்திரை 1985 கவிதா மண்டலம் இதழில் தமிழாக்கம் செய்துள்ளார் பாவேந்தர்.

“யுத்தம் வராதா என்று ஏராளமான போர்க் கருவிகளைச் செய்து குவித்துக் கொண்டு காத்திருக்கின்றனர் ஆயுதத் தொழிற்சாலையினர். அவர்கள் உடனே உலகில் போர் ஒன்று ஏற்பட வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திப்பதாக ஒரு ஆங்கிலக் கவி” எழுதிய பாடலைத் தழுவி யுத்தம் வராதா என்ற தலைப்பில் சங்கு சுப்பிரமணியன் எழுதிய கவிதை கவிதா மண்டலத்தில் வெளியாகியுள்ளது.

பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் பன்மொழிகளில் மொழியாக்கம்
செய்யப்பட்டன. அது பற்றிக் கவிதா மண்டலத்தில் எழுதும் எஸ்.ஆர்.சுப்பிரமணியன் “சுப்பிரமணிய பாரதியார் கவிதா மண்டலம் ஆசிரியர் பாரதிதாசன் சுமார் 20 ஆண்டுகளாக எழுதி வெளியிட்டு வந்துள்ள தமிழ்க்கவிகளில் அநேகம் இங்கிலீ தெலுங்கு முதலிய பாi~ வல்லுநர் தமது பத்திரிகையில் மொழி பெயர்த்து வெளியிட்டு வந்துள்ளார்கள். பாரதிதாசன் முதன் முதலில் பாரதியார் முன்னிலையில் அவர் கட்டளைப்படி எழுதிய சக்திப்பாட்டு ஒன்றை  Bombay Standard என்ற சிறந்த இங்கிலீ~; பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் கே. சீனிவாசன் அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டார்” என்று எழுதியுள்ளார். The Mothers Majesty-Manifestations of Primal Power –என்ற தலைப்பில் அக்கவிதை கவிதா மண்டலத்தில் வெளியாகியுள்ளது.

இச்செய்தி மூலம் “தெலுங்கில்” மொழியாக்கம் செய்யப்பட்ட பாவேந்தர் பாடல்கள் பற்றி அறிகிறோம். ஆய்வாளர்கள் அந்தப் பாடல்களைத் திரட்டித் தொடுக்கும் பணியில் ஈடுபடல் வேண்டும்.

ரூழே தெலீஸ் என்பார் “பிரெஞ்சு தேச மக்களைப் போருக்குக் கிளப்பிய மார்செயேன் என்ற எழுச்சிப் பாட்டானது உலகத்திலேயே கீர்த்தி பெற்றதுவாகும் என்று “தூக்குவீர் கத்தியை” என்ற தலைப்பில் தமிழாக்கியுள்ளார்.

சல்லி ப்ருய்தோம் என்ற பிரஞ்சுக் கவிஞரின் பாடலை வழக்கறிஞரான எஸ்.நடனசபாபதி „ஓர் கனவு‟ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்துள்ளார்.

 ஆங்கிலக் கவிஞன் கீட்ஸ் எழுதிய கவிதையை அழுகுடைப் பொருள் என்ற தலைப்பில் கே. பஞ்சாபகேசய்யர் பி.ஏ.எல்.டி என்ற ஆசிரியர் தமிழாக்கம் செய்தள்ளார்.

 சிறீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் வைகாசி 1935 இதழில் பெண்களைப் பற்றி பெர்னாட்~h என்ற கவிதை வெளியாகி உள்ளது.  பிரஞ்சுக் கவிஞர் விக்தோர் உய்கோ எழுதிய ஏழைகளுக்கு என்ற கவிதையைத் தழுவி பெரும் புலவர் மு.த. வேலாயுதனார் தமிழாக்கம் செய்துள்ளார்.

“அலக லல்ல லாடக நி” என்ற தியாகராஜ கீர்த்தனையை பாவேந்தர்
பாரதிதாசன் தமிழாக்கம் செய்துள்ளார்.

எச். டபிள்யூ லாங்ஃபெல்லோ என்ற ஆங்கிலக்விஞரின் கவிதையை குழந்தைகள் என்ற தலைப்பில் தமிழாக்கிக் கவிதா மண்டலம் வெளியிட்டது.

சிறீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் ஆனி மாதம் 1935 இதழில் “ச்யாம சுந்தராங்க” என்ற தியாகராஜரின் கீர்த்தனையை பாவேந்தர் தமிழாக்கம் செய்துள்ளார்.

பிரெஞ்சுக் கவிஞர் ப்ளோரியான் எழுதிய கவிதையை “செம்மறியாடும் நாயும்” என்ற தலைப்பில் பெரும்புலவர் மு.த. வேலாயுதனார் மொழியாக்கம் செய்துள்ளார்.”

சல்லி புரூய் தொம் என்ற பிரஞ்சுக் கவிஞரின் கவிதையை சிறீ பஸ்தேருக்குக் கடிதம் என்ற தலைப்பில் எஸ். நுடனசபாபதி மொழி பெயர்த்துள்ளார்.

விக்தோர் உய்கோ எழதிய “காதல்” என்ற கவிதையையும் நடனசபாபதி மொழி பெயர்த்துள்ளார்.  கவிதா மண்டலம் : ஆவணி 1935 இதழில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் “நிஜமர்மமுலனு” என்ற தியாகராசர் கீர்த்தனையை தமிழாக்கம் செய்துள்ளார்.

பிரிசோ என்ற பிரெஞ்சுக்கவி 5வயதுச் சிறுவனாக இருந்தபோது விளையாட்டாக நன்றாகப் பாடிக்கொண்டிருந்த வானம்பாடியைச் சுட்டு வீழ்த்தினர். கவிஞரானதும் அதை நினைவு கூர்ந்து வானம்பாடியின் மரணம் என்ற கவிதை இயற்றினார். அதைத் தமிழணங்கு ஆசிரியர் மு.த.வேலாயுதனார் தமிழாக்கம் செய்தார்.

மேக்கெய் என்ற ஆங்கிலப் பாவலன் பாடலைத் தழுவி “எனது நல்ல வலது கரம்” என்ற தலைப்பில் க. புருசோத்தமன் மொழியாக்கம் செய்தார்.

மாபெரும் ஆங்கிலக் கவிஞன் N~க்ஸ்பியர் எழுதிய வெனிசு நகர வணிகன் நாடகத்தின் தமிழ் மொழியாக்கம் தென்னாப்பரிக்கா டர்பன் நகரில் வாழ்ந்த ச. முனிசாமிப் பிள்ளையால் செய்யப்பட்டது. இந்நகரில் என் பாட்டனார் கோ. இராமதாசுப் பிள்ளையும் வாழ்ந்தார். இப்பாடல் சிறீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலத்தில் வெளிவந்ததால் புதுவையின் பங்களிப்பில் இடம் பெறுகிறது.“இரக்கத்தின் சிறப்பு” என்ற தலைப்பில் வெளியாகியது.

ஆந்திரே n~னியேவின் கருத்தைத் தழுவி பெரும் புலவர் மு.த.வேலாயுதனார் “சுதந்திரம்” என்ற தலைப்பில் கவிதை எழுதினார்.

“1851 ஆம் ஆண்டு திசம்பர் 2ம் நாள் மூன்றாவது நெப்போலியன் பிரான்சின் குடியாட்சியை முடியாட்சியாக்கிக் கொண்டு அரசனானான். அப்போது அவன் குடியரசுவாதிகளை நாடுகடத்தி விட்டான். நாடு கடத்தப்பட்டவர்களில் பிரெஞ்சு தேச மகாகவி விக்தோர் உய்கோவும் ஒருவர். அப்போது அவர் நாடுகடத்தப்பட்டவர்களின் வீட்டைப் பற்றி மிக உருக்கமாகப் பாடியதை” பின்னாளில் புதுவைச் சிவம் என்று அறிமுகமான ச. சிவப்பிரகாசம் அந்நாளில் துக்க வீடு என்ற தலைப்பில் பாடியுள்ளார்.

ரோன்சார் என்ற 16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சுக்கவி தாம் காதலித்த ஹெலன் என்பவள் தம்மை விரும்பவில்லை என்பதைத் அறிந்து கவிதையாக கடிதம் எழுதினார். அதன் தமிழாக்கத்தை வழக்கறிஞர் நடனசபாபதி எழுதியுள்ளளார்.

“மனஸா சிறீ ராமச்சந்த்ருனி” என்ற தியாகராஜ கீர்த்தனை கவிதாமண்டலம் இதழாசிரியர் பாரதிதாசனால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மொழியாக்க முன்னோடிகளாக மகாகவி பாரதியாரையும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனையும் பெற்றுப் புகழீட்டிய புதுவை மண்ணில் சிறீ சுப்பிரமணிய பாரதி கவிதாமண்டலம் என்ற ஒரே இதழில் இத்துணை மொழி பெயர்ப்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர். புதுவையில் வெளிவந்த சிற்றிதழ்கள் அனைத்தையும் அலசித் தேடினால் இன்னும் பலரது பங்களிப்பு பாரறியும்.

கேரளப் பெரியார் நாராயணகுரு புதுவையிலும் சிதம்பரத்திலும் வடலூரிலும் சில காலம் இருந்துள்ளார். அவர் சிதம்பரத்தின் அருமை பெருமைகளை வடமொழியில் “சிதம்பரா~;டகம்” என்ற நூலாக யாத்துள்ளார். புதுச்சேரியில் அவர் வேதபுரீசுவரர் மீது தமிழில் வெண்பாக்களால் ஒரு கவிதை நூலை இயற்றியுள்ளார். அந்நூல் மலையாள வரிவடிவத்தில் உள்ளது. ஒரு மலையாள அறிஞர் அதை வாசித்துக் காட்டியபோது தமிழ் வெண்பா என்பது எனக்குத் தெளிவாகியது. இதை மீட்டெடுத்துத் தமிழில் பதிப்பித்தாகல் வேண்டும் நியு இந்தியன் எக்சுபிரசில்  Narayana Guru and Tamil Soil  என்ற தலைப்பில் 13 ஆகத்து 2005ல் நானெழுதிய கட்டுரையில் இதனைப் பதிவு செய்துள்ளேன். மலையாள மொழிக்குரிய வரிவடிவம் புதுச்சேரியையோ இதனை ஒட்டிய தமிழகப் பகுதிகளிலோ இருந்த சமயத்தில் தான் துஞ்சத்து எழுத்தச்சனால் உருவாக்கப்ப்ட்டதாக அந்த மலையாள அறிஞர் என்னிடம் உரையாடுகையில் தெரிவித்து கருத்து ஆய்வு செய்யப்பட்ட வேண்டிய கருத்தாகும்.

“நரம்பிசைக் கருவிகள் அய்யாயிரமாண்டுகளாக இருந்து வந்துள்ளன.
அத்தகு நரம்பிசைக் கருவிகளுள் பழமையானது யாழ். இன்று இலங்கைக்குள் இருக்கின்ற யாழ்ப்பாணத்தில் தான் யாழ் உருப்பெற்றது. யாழ் போன்றதொரு இசைக்கருவியில் இருந்தே மேற்கத்திய இசைக்கருவி “கித்தார்” உருவாகி இருத்தல் வேண்டும். இது போன்ற நரம்பிசைக் கருவிகள் இலங்கையில் ஈரானில் நடுவண் ஆசியாவில் இருந்தன. அவற்றிலிருந்தே கித்தார் உருவானது. மேற்கத்திய “கித்தார்” இசைக்கருவியை ஒத்த கருவிகள் பற்றி சுசா குகை எழுத்தோவியங்களிலும் ரொனியச் சமவெளியில் கண்டு எடுக்கப்பட்டச் சிற்பங்களிலும் காண்கிறோம்.” என நான்  A Journey in Rhythem என்ற கட்டுரையில் நியு இந்தியன் எக்சுபிரசில் 10 செப்டம்பர் 2005 அன்று எழுதினேன்.

“கித்தார்” என்ற மேற்கத்திய நரம்பிசைக் கருவியின் பெயர் கீத் என்ற சமற்கிருதச் சொல்லில் இருந்தும் “தார்” tar என்ற பாரசீகச் சொல்லில் இருந்தும் உருவாயிற்று. பாரசீக மொழியில் “தார்” என்பது நரம்பைக் குறிக்கும். எனவே சமற்கிருதச் சொல்லும் பாரசீகச் சொல்லும் இணைந்து இசையில் சங்கமாயின. இப்படி Guitar என்ற நரம்பிசைக் கருவிக்குப் பெயர் உருவான விதம் பற்றி இசைக் கடல் – இலக்கணச்சுடர் இரா. திருமுருகன் கூறிய விளக்கம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டதால் நியு இந்தியன் எக்சுபிரசு வழி அனைவரும் அறிய முடிந்தது.

 மொழி பெயர்ப்புச் சிக்கல்களுக்கு அறிவியலும் தீர்வு தேட முற்பட்டுள்ள காலத்தில் வாழ்கின்றோம். “ஒவ்வொரு மொழிக்கும் பொருந்தக்கூடிய பொதுவான குறியீட்டு மொழியைக் கண்டெடுத்து அதன் மூலம் உலக மொழிகளுக்கிடையே மொழி பெயர்ப்புச் சிக்கல்களைத் தீர்த்து வைக்க அய்க்கிய நாடுகள் நிறுவனம் 1996 முதல் முயன்று வருகிறது. Universal Networking Language Project  என்ற அனைத்துலக மொழிகள் இணைப்புத் திட்டத்தில் இந்தியா உள்ளிட்ட 18 நாடுகள் தங்கள் பங்களிப்பை நல்கியுள்ளன. அரபி இத்தாலியன் பிரெஞ்சு ஸ்பானி~ போர்த்துகீசு ஆகிய மொழிகளுக்கும் அனைத்துலக இணைப்புக் குறியீட்டு மொழிக்கும் நல்ல இசைவு – இணக்கம் உருவாகிவிட்டது என 2004 ல் நான் எழுதினேன்.

 “குறியீட்டு மொழிக்கும் மேற் சொன்ன மொழிகளுக்கும் ஒத்திசைவு உள்ளதால் ஆங்கிலத்திலிருந்து குறியீட்டு மொழிககு மாற்றி அதிலிருந்துச் சில நொடிகளில் அரபி மொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்ய முடியும். போர்த்துகீசில் இருந்து பிரஞ்சுக்கும் இப்படிக் குறியீட்டு மொழியைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம். இந்த Universal Networking Language புதிய எசுபிராண்டோ என்று போற்றப்படுகிறது. எசுபிராண்டோ என்று அறிஞர்கள் கூடிச் செயற்கையாக ஒரு மொழியை உருவாக்கி இருந்தார்கள். அது போன்று புதிய குறியீட்டு மொழியும் பெயர்பெற்றது. மொழிபெயர்ப்புச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் இக்குறியீட்டு மொழி முதுகெலும்பாகத் திகழ்கிறது” என்று புவி வரலாறு முதல் புதுவை வரலாறு வரை உண்மைகளின் ஊர்வலம் – 8 என்ற தொடரின் 2004 ல் எழுதி இருந்தேன்.

“இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்புச் சிக்கல்களுக்குத் தீர்வு காண பொறி மொழியை – குறியீட்டு மொழியை நமது மொழிகளுடன் ஒத்திசைவு செய்ய அறிஞர்கள் முயன்று வருகின்றனர். மகாராட்டிர மாநிலம் போவையில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜிää கணினிகளுக்கு இந்தியும் மராத்தியும் கற்றுத் தரும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஒரு மொழியை அக்குவேறாகக் கழற்றிப் பார்த்து அடிப்படைக் கட்டமைப்பை புரிந்து கொண்டு கணினியின் பொறி மொழியுடன் பொருத்தும் பணியில் இந்தி மராத்திமொழிகள் வெகுவேகமாக ஈடுபட்டுள்ளன. உலகின் முதன்மொழிக்குச் சொந்தக்காரர்கள் உறங்கிக் கொண்டுள்ளார்கள்” என 2004 ல் சொன்னேன். 2012 ல் மீண்டும் நினைவூட்டுகிறேன்.

பிறமொழி அறிவை வளர்க்க குறிப்பாகப் பிரெஞ்சு மொழியை எளிதில் கற்க Moodle.org என்ற இலவய இணையதளத்தில் உள்ள திறந்தநிலை (open source) ஆவணத்தில் இருக்கும் மென்பொருளைப் பயன்படுத்தி புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் பிரெஞ்சுத் துறைத் தலைவர் ஜெயராஜ் டேனியல் அம்மொழியை கற்றுத்தரும் பாராட்டத்தக்க பணியில் ஈடுபட்டுள்ளார். படி இறக்கம் செய்யக்கூடியதாக உள்ள Moodle 2.0 மொழிச் சேவைப்படி 23 மொழிகளை 80 விழுக்காடு மொழியாக்கம் செய்ய முடியும். 12 மொழிகளை 60 விழுக்காடு  11 மொழிகளை 40  விழுக்காடு 52 மொழிகளை 40  விழுக்காட்டுக்கும் குறைவாகவும்  மொழி பெயர்ப்புச் செய்ய முடியும் என்ற நிலை நிலவுகிறது. தமிழை 70 விழுக்காடு மொழியாக்கஞ் செய்யக் கூடிய மென்பொருள் வந்துவிட்டது.

பிரெஞ்சு அரசின் தேசிய நூலகத்தில் வேறெங்கும் கிடைத்திடாத அரிய தமிழ் ஏடுகள் சுவடிகள்- நூல்கள்-மொழியாக்க நூல்கள் உள்ளன.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட “Dictionary of Technical Terms from English to Tamil  நூல் பற்றித் தமிழ்நாடு திட்டக்குழுத்
துணைத்தலைவராக விளங்கிய முனைவர். மு. நாகநாதன் விதந்து எழுதியுள்ளார்.

ஈடிணையற்ற இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் சிலருள் சிறப்பிடம் பெற்றப் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மருமகனும் புதுவைத் தாகூர் கல்லூரியின் மேனாள் மாணவத்தலைவருமான பக்தவத்சலம் என்ற ப. அருளி உருவாக்கிய அருங்கலைச் சொல்லகராதியே புதுவை மொழிபெயர்ப்பாளர்களில் அவரை முதலிடத்தில் கொண்டு சேர்க்கும் சிறப்புடையது.

மூன்று இலட்சம் அறிவியல்- பொறியியல்- கலைச் சொற்களைத் தமிழாக்கிய அறிஞர் ப. அருளியின் பங்களிப்பு மிகப்பெரிது போற்றற்குரியது. ஓவ்வொரு இலக்கியமும் அதன் மொழிபெயர்ப்பும் உலகப் பண்பாட்டுச் செழுமைக்கும் உறவுக்கும் எத்துணை தூரம் இன்றியமையாததோ அவ்வளவுக்கு அருங்கலைச் சொல் அகராதிகளும் மொழி வளர்ச்சிக்குப் பயன்படக் கூடியவை.

பிற நாட்டு நல்லறிஞருள் முதலிடம் பெறத்தக்கவர் டாக்டர் ஈவா வில்டன்

பிற நாட்டு நல்லறிஞருள் முதலிடம் பெறத்தக்கவர் டாக்டர் ஈவா வில்டன் அவரைப் பற்றி எழுதிடத் தகவல் கேட்டறியச் சென்றால் அவரெழுதிச் சொல்வது கோபாலய்யர் பற்றி! ஈவா வில்டன் ஆற்றியுள்ள ஈடில்லாத் தமிழ்த் தொண்டுக்கு அவரின் வழிகாட்டியாக விளங்கிய நூற்கடல் கோபாலய்யர் தூண்டுகோலாகத் துலங்கியவர். நன்றி மறவா ஈவா வில்டன் நூற்கடலுக்கு முதல்மரியாதை தரச்சொல்வதன் மூலம் தமிழுலகில் போற்றத்தகு பண்புடைய பெருமகளாக நம் மனங்களில் இடம் பெறுகிறார்.

தொலைகிழக்கு நாடுகள் ஆய்வு நிறுவனம் சார்பில் கோபாலய்யர் நினைவு நூலாக ஈவா வில்டன் தொகுத்து வெளியிட்ட Between Preservation and Recreation:Tamil Traditions of Commentary என்ற நூல் கோபாலய்யரின் தமிழ்ப் பணிகளைப் பட்டியல் இடுகின்றது.

 தேவாரத்தைப் பண்முறையில் ஆய்வு செய்து சொற்பிரிப்பு நிறுத்தக் குறிகளுடன் பதிப்பித்தார்.

மாறனகப்பொருளையும் அதன் இலக்கிய நூலான திருப்பதிக் கோவையாரையும் பதிப்பித்தார்.

வீரசோழியத்துக்கு விரிவான விளக்கம் எழுதினார்

தொல்காப்பியத்துக்கும் அதன் உரைகளுக்கும் பிழையற்ற பதிப்பு வெளியிட்டார்.

 தமிழ் இலக்கணப் பேரகராதியை 17 தொகுதியாக வெளியிட்டார்.

பெரிய திருமொழிக்குப் பெரியவாச்சான் பிள்ளை எழுதிய மணிப்பிரவாள நடையில் அமைந்த உரையைத் தமிழாக்கி வெளியிட்டார்.

 ஆலன் டேனியலுக்காக மணிமேகலையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் உதவியவர்.

 ழான் செவியரின் சேனாவரையம் பிரெஞ்சு மொழியாக்கத்துக்கு உதவியவர்.

ஜேம்ஸ் ரயானின் சீவக சிந்தாமணி ஆங்கில மொழியாக்கத்துக்கு உதவியவர்.

கோபாலய்யரின் தமிழ்த் தொண்டு மட்டுமல்ல பிரெஞ்சு அரசு நிறுவனமான தொலைகிழக்கு நாடுகள் ஆய்வு நிறுவனம் புதுச்சேரியில் அமைதியான முறையில் ஆற்றிவரும் தமிழ்ப்பணிகளும் போற்றத்தக்கவை. நன்றியுடன் நினைவு கூரத்தக்கவை. நன்றி மறவா ஈவா வில்டன் தன் தமிழாசிரியரை முதலிடம் தந்து சிறப்பிக்கிறார். ஆனால் ஈவா வில்டனும் தமிழுக்குழைத்தல் பிற நாட்டு நல்லறிஞர் வரிசையில் முதலிடத்தில் வைத்துப் போற்றித்தரும் புகழ்மிகு பெண்மணியே!

டாக்டர் ஈவா வில்டன் செருமானியே இலக்கியம் கற்றவர். தத்துவ வித்தகர்.இந்தியவியல் ஆய்விலும் தேறியவர். டுயூசெல்டார்ப் டியூபின்சென் ஆம்பர்க்ப்பல்கலைக்கழகங்களில் பயின்றவர். 1996ல் Veda: The Circulation of Sacrificial Gifts என்றத் தலைப்பில் வேதங்களைப் பற்றி முனைவர் பட்டத்தை ஆம்பர்க்கு பல்கலைக்கழகத்தில் பெற்றவர்.

நற்றிணையைச் செம்பதிப்பாகக் கொண்டு வந்தமையால் ஈவா வில்டன் பெயரும் வரலாறும் இடம் பெறுவதில் வியப்பில்லை. நற்றிணைச் செம்பதிப்பு மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளது. முதல் தொகுதியில் 200 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

இரண்டாம் தொகுதி 201-400 வரையிலான பாடல்களைக் கொண்டது. மூன்றாம் தொகுதி சொல்லகர நிரலாக வெளிவந்துள்ளது.

இதுவரை தமிழில் வெளிவந்துள்ள 20 குறுந்தொகைப் பதிப்புகளை ஒப்பாய்வு செய்து செம்பதிப்பை 3 தொகுதிகளாக வெளியிட்டவர் டாக்டர் ஈவா. வில்டன்.

ஜே. எல். செவில்லார்டுடன் இணைந்து அகநானூற்றையும் வெளியிட அயராது உழைத்துக் கொண்டிருப்பவர் டாக்டர் ஈவா. வில்டன்.

இப்படி தமிழுக்குத் தொண்டு புரிய இவருக்குத் தூண்டுகோலாக விளங்கியவர் ஆம்பர்க்கு பல்கலைக் கழகப்பேராசிரியர் சீனிவாசன் ஆவார். குறுந்தொகை மொழியாக்கம் ஆய்வேடாக 2002ல் ஆம்பர்க்கு பல்கலைக் கழகத்தில் அளிக்கப்பட்டது. இந்த நூலுக்காக இவர் கலந்தாய்ந்த அறிஞர்கள் பெயரை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவருக்கு வடமொழி கற்பித்த பேராசிரியர் அல்பிரெச்ட் வெசுலா பேராசிரியர் இலம்பர்ட்டு சுமிதாசன் ஆகியோர் இந்தப் பட்டியலில் அடங்குவர்.

பேராசிரியர் டி. ஓபன்சகாயா (ஆம்பர்க்கு) டாக்டர் ழான் லக் செவில்லார்டு (பாரிசு) மற்றும் செய்யுலியலைப் புரிந்து கொள்ள அதிலும் களவு பற்றி அறிய டோக்கியோவில் ஒரு மாதம் தங்கி பேராசிரியர் டி. தகாஆசியிடமும் விளக்கம் பெற்றார். பிரேக்கு நகரில் பேராசிரியர் செ. வாசெக்கு அவர்களிடமும் மாஸ்கோவில் பேராசிரியர் அலெக்ஸாண்டர் துபாய்ன்சுகியிடம் ஆய்வுக்காக அறிவுரை பெற்றதை ஈவா வில்டன் Literary Techniques in Old Tamil Cankam Poetry என்ற ஆய்வேட்டில் பதிவு செய்கிறார்.

சங்க இலக்கியத்தை ஆய்வு செய்ய விளக்கம் அளிக்கக் கூடிய இத்துணைச் சான்றோர்கள் உலகில் இருக்கிறார்கள் என்று நாம் பெருமிதம் கொள்ள முடியும். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தீட்ட ஒரு கால்டுவெல்! குறுந்தொகையைப் செம்பதிப்பு கொண்டுவர ஒரு ஈவா வில்டன்! நற்றிணையை மொழியாக்கம் செய்து நானில மறியச் செய்யவும் ஈவா வில்டன். மொழியாக்க முன்னோடிகள் தமிழுக்குத் தரும் ஊக்கம் தமிழ்நாட்டவர் செய்யத்தவறிய குறைகளை நீக்கும். சோம்பிக்கிடக்கும் தமிழறிஞர்க்கு ஏக்கம் பிறக்கும்! சொந்த மொழிச் சேவையில் பிறநாட்டு நல்லறிஞர் முந்துகிறார் என்ற நிலை நமக்கு அளிக்கட்டும் ஆக்கம்!

  தமிழ்மாமணி நந்திவர்மன்

11000 YEARS AGO CHOZHA PORT POOMPUHAR SUBMERGED IN SEAS

N.Nandhivarman

 Tamilnadu Government had initiated the process of beautification of Poompuhar, the Port town of Chozha Empire. The need to promote cultural tourism is welcome but beautification of existing Poompuhar will not shed light on hidden history of Poompuhar. And we indulge in self boasting about our past without show casing our past with archeological and other evidences acceptable to historians. We have literary evidences and even to parade before the scholarly world we are not having enough translations of all our literature.

 In such a situation let me draw your attention to the archeological find beneath the seas off shore of Poompuhar. National Institute of Oceanography on March 23 of 1991 found the remains of a fort wall in the shape of horse shoe. It was more or less in the shape of letter U. Its length was 85 meters and height was approximately 2 meters. The distance between one edge and other edge in the opening area was 13 meters. Wall was covered by dust settled there over centuries. Though in 1993 this U shaped remnant of a Fort was found offshore of Poompuhar for want of funds no further research or quest was carried out in that zone. The dating of that structure using carbon dating method was said to be of 3rd century B.C. Graham Hancock read from London about this discovery and dating. Any structure close to shore within 2 meters depth could belong to 3rd century B.C, but this structure was below 23 meters, and for this depth sea level must have risen by inundation or sea level rise. Within 3 centuries up to 23 meters sea level could not have risen as found in oceanographic studies.

With doubts lingering in his mind, Graham Hancock flew from London to Bangalore to meet S.R.Rao, who was instrumental is establishing the National Institute of Oceanography as well as the deep sea probe offshore of Poompuhar. The meeting took place in 2001 and the 70 year old S.R.Rao told Graham Hancock. “We are sure that it is a structure built in land and submerged into seas, and we using carbon 14 dating method arrived at that date, but after you pose questions it strikes to me it must be long before 3rd century B.C” But he agreed that oceanographic study to determine the rise of sea level will answer the puzzle over the dating of the submerged U shaped structure. But S.R.Rao admitted that oceanographic study was undertaken in Gulf of Kutch belonging to Gujarat state of India. In 10,000 B.C. the sea level there was 60 meter below current sea level. There has been no such oceanographic study in South India.

 Anyhow the findings of Gulf of Kutch could be more or less applied for Poompuhar in Tamilnadu, The dialogue between Graham Hancock and S.R.Rao is not taken out of context from a fiction but from Graham Hancock’s Underworld: The Mysterious Origins of Civilization published by Penguin in 7 th February 2002. Close on the heels of publication of this book the Channel 4 Television of UK which won Tamils gratitude for exposing Tamil Genocide recently, telecasted on 11, 18 and 25th February 2002 a programme titled Flooded Kingdoms of Ice Age. By this time the Dwaraka found in Gulf of Kutch based on oceanographic study was proclaimed to belong to 7500 B.C and leading journals of India carried cover page stories over that discovery. But the same team that discovered Dwaraka discovered Poompuhar but date was confined to 3rd century B.C.

 The megaphone warriors of Tamilnadu kept silent in their street corner meetings since they don’t know the subject, nor the chosen representatives of people sitting in Parliament raised their voice because they know they are puppets and puppeteers have not given instructions to open their mouth in the Parliament.

 Graham Hancock took up the issue of dating the Poompuhar structure with Glenn Milne of Durham University who prepares inundation maps of the world. The date for a structure to go down in sea or sea level to rise 23 meters was 9500 B.C. Hence 11,000 years ago the Fort beneath Poompuhar Sea must have submerged. The Last Ice Age global warming and sea submergence of lands occurred before 12000 years ago and the submergence of Poompuhar tallied with that world known fact. But no media of Tamilnadu had brought this to light because those who propounded the theory of 3rd century B.C did not share his views. He went to Bangalore to report about Poompuhar, exhibited there and met the press to break the story from there. Such scene is prevalent in Tamilnadu. Scholars may agree or disagree but for a scholar to express his discovery there should be no media black out… Just before the Classical Tamil Conference I wrote in Suryakathir on the Historical Treasures beneath our Seas, and also wrote to then Chief Minister Kalaignar M.Karunanithi whom I personally know urging him to invite Graham Hancock but in vain.

Now that Tamilnadu Government plans to promote historical and cultural tourism, whatever has been found must be placed in a museum and Graham Hancock must be invited to further probe off shore of Poompuhar to unearth sorry to un-sea our past archeological grandeur.

உலகுக்கு குமரிக்கண்டம் பற்றிச் சொல்ல

– நந்திவர்மன்
 
கடவுளின் கைரேகைத் தடங்கள்  என்ற நூல் 1994 ல் வெளியாயிற்று.  உலகெங்கும் பரபரப்புடன் விற்றுத் தீர்ந்தது. இந்நூல் ஆசிரியர் உலகப் புகழை உடனே எட்டி விட்டார்.  உலகில் நாகரிகம் என்பதே 6000 ஆண்டு பழமையுடையது என்ற கருத்து ஓங்கி இருந்தது! வந்தார் கிரகாம் ஹான்காக்!  தடாலடியாக 17000 ஆண்டுக்கு முன்பே மனித குலம் நாகரிகமடைந்திருந்தது என்று போட்டாரே ஒரு போடு! சும்மா கப்சா விடவில்லை. 
 
இந்தியா அருகில் உள்ள கடலடியில் மூழ்கி ஆய்வு செய்தார்.  ஜப்பான் தாய்வான் சீனா அருகில் உள்ள கடல்கள் அடியில் நாகரிகம் இருந்த அடையாளங்களைத் தேடினார். அரபிக் கடலடி யிலும் மத்திய தரைக்கடல் அடியிலும் சான்றுகளைத் தேடினார்.  அவர் தேடுவதற்கு தூண்டுதலாக உலக இலக்கியங்கள் அமைந்தன.  தமிழர்களின் சங்க இலக்கியம்  வேதங்கள் உள்ளிட்ட நூல்கள் கூறும் கடற்கோள்களை நினைத்துக் கொண்டார். பைபிள் கூறும் நோவா வின் படகை நினைத்துக் கொண்டார். கடற்கோள் பற்றியும் பெரு வெள்ளம் ஏற்படுத்திய அழிவுகள் பற்றியும் பல நாடுகளில் பலமொழிகளில் சுமார் 600 புராணங்கள் தொன்மங்கள் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவை அத்தனையும் கட்டுக்கதையாகிட முடியாது என்று கிரகாம் ஹான்காக் நம்பினார்.

 இன்றிலிருந்து 17000 ஆண்டு முன்பு உலகில் நாகரிகம் மிகுந்த சமுதாயங்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.  17000 முதல் 7000 ஆண்டு வரை ஆங்காங்கே கடற்கோள்கள் நடந்தன.  ஆழிப்பேரலைகள் எழுந்தன.  அதில் 15 மில்லியன் சதுர கிலோ மீட்டர் மக்கள் வாழ்ந்த நாடுகளும் நிலங்களும் கடலடியில் மூழ்கியது.  அந்தப் பகுதிகளில் மனித குலத்தில் முன்னோடி நாகரிகம் பற்றி தேடியாக வேண்டும்.  தமிழர் வரலாற்றை உலக வரலாற்றில் இருந்து பிரித்து தனியே கண்டறிய முடியாது. ஒரு காலத்தில் மனிதன் வாழ்ந்த நிலம் இன்று கடலாக உள்ளது.  இந்தியா ஒரு காலத்தில் நான்கு புறமும் கடல் நீரால் சுழப்பட்ட நாவலந்தீவு ஆக இருந்தது.  நாவலந்தீவு என்பது தமிழ் இலக்கண நூல் பிங்கல நிகண்டு கூறும் பெயர். 

 இந்தியா இன்றுள்ள இடத்தில் இப்போது இருப்பது போன்ற வடிவில்தான் இருந்தது என்று முடிவு கட்டிக்கொண்டு வரலாறு எழுதக் கூடாது.  எழுதுவதும் தவறு.  சிலப்பதிகாரத்தில் இந்துமாக்கடல் கொண்ட குமரியாறும் பஃறுளியாறும் பல மலைத்தொடர்களும் பற்றி பேசப்படும்.  எனவே இது போல் இலக்கியங்கள் கூறும் நாகரிகங்களைக் கண்டறிய கடலடி ஆய்வில் இறங்கினார் கிரகாம் ஹான் காக்!

 ஜப்பான் அருகே அவர் கண்டெடுத்த சான்றுகள் பற்றி சொர்க்கத்தின் கண்ணாடி  என்ற நூலில் பதிவு செய்தார்.  மால்டா  இந்தியா ஜப்பான் பகாமாஸ் எனக் கடலடியில் அவர் மேற்கொண்ட அகழ்வாய்வுகளை  நூலில் பதிவு செய்தார்.  அந்த நூலில் தான் நமது பூம்புகார் பற்றிய வியத்தகு கண்டுபிடிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

 இந்திய அரசு 1000 ஆண்டு பழமையும் இலக்கிய வளமுள்ள மொழியை செம்மொழி என அறிவிக்கலாம் என்று வரையறை வகுத்தது! அதன்படி தமிழ்ச்செம்மொழி என அறிவிக்கப்பட்டது.  ஆனால் 1000 ஆண்டு வரலாறு எங்களுக்கும் உண்டு என்று வேறு சில மொழிகளும் செம்மொழிப் பட்டியலில் இடம் கேட்கின்றன.

 ஆனால் 1000 ஆண்டா? தமிழ் வரலாறோ கி.மு. 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்பதை பூம்புகார் நகரின் சில கூறுகளை கடலடியில் கண்டெடுத்து கிரகாம் ஹான்காக் 11500 ஆண்டு பழமை நமக்குண்டு என்று நிறுவுகிறார்.
 
அவர் கண்டுபிடித்தது கொஞ்சமே! இன்னும் கூடுதலாக கடலடியில் நாம் ஆய்வு செய்தாக வேண்டாமா? மூழ்கிய நம் நகரங்களை முத்து குளிப்பது போல் மூழ்கி வெளியே எடுத்து வர வேண்டாமா? பூம்புகார் மட்டுமல்ல புதையுண்ட நம் குமரிக் கண்டத்தையும் நாம் மீட்டெடுக்க வேண்டாமா? ஆய்வு செய்திடல் வேண்டாமா? 

பூம்புகாரை எப்படி கடல் விழுங்கிறது? குமரிக்கண்டமும் அதிலிருந்த குமரியாறும் இந்தமாக்கடலில் எப்படி மூழ்கின? பஃறுளியாறும் பல அடுக்குளாக இருந்த மலைகளும் எப்படி கடலடியில் மூழ்கின? இந்த வினாக்களுக்கு விடை கிரகாம் ஹான்காக் இடம் கிடைக்கிறது. அவர் சொல்கிறார் “மனித குல வரலாற்றில் கடந்த முக்கிய பேரழிவு பற்றி நாம் மறந்து விட்டோம்.  பனி ஊழிக்காலத்தின்  கடைசியில் 12000 ஆண்டுகள் முன்பு உலகில் கடல்களை ஒட்டிய கடற்கரை ஓரங்களில் கடலோடிகளாகவும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் வாழ்ந்தார்கள்! அவர்கள் கடல் மட்டம் உயர்ந்ததால் பெரு வெள்ளம் ஏற்பட்டு வாழ்ந்த நாடுகளை விட்டு துடைத்து எறியப்பட்டார்கள்.  இந்தப் பேரழிவு உலகில் உள்ள 600 தொன்மக் கதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மலை உயரத்துக்கு ஆழிப்பேரலை எழுந்து மனித குலத்தை அழித்த நிகழ்வு ஏதாவது ஒரு வகையில் பல நாட்டு இலக்கியங்களில் இடம் பிறந்துள்ளது.

அந்தக் காலச் சுநாமி

எப்படி நடந்திருக்கும் அந்தக் காலத்துக் சுநாமி? அப்போது வட அமெரிக்காவுக்கும் வடஐரோப்பாவுக்கும் இடையே கடல் இல்லை.  பனிப்பாறைகளே இருந்தன.  அண்டார்டிகாவில் இன்று இருப்பது போல! அதுவும் 3 மைல் ஆழத்துக்கு பனிப்பாறைகள் இருந்தன.  அதன் மீது ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டம் போகக் கூடிய சுழ்நிலை இருந்தது.  புவி வெப்பமாதல் பற்றி இன்று அலறுகிறோம்! அன்று வெப்பத்தால் இந்தப் பாறைகள் உருகி கடல் தோன்றியது.  உருகிய பனி பாறைகள் உலகெங்கும் ஆழிப்பேரலைகளை உருவாக்கின.  பல நாடுகளை அவை விழுங்கின.  அப்படி அழிந்து போனது நம் குமரிக்கண்டம்! கடலுள் மூழ்கியது நம்ம பூம்புகார்.  இவற்றை முதலில் கண்டறிந்த பெருமைக்குரியவர் கிரகாம் ஹான்காக்!

அவர் மட்டுமல்ல உலகில் பல நாட்டவரும் கடலடி அகழ்வாய்வில் ஈடுபட்டனர்.  கடலில் மூழ்கிக் காணாமல் போன கப்பல்களை தேடுவதில் தொடங்கினார்கள்.  உலகெங்கும் 3 மில்லியன் கப்பல்கள் கடலடியில் மூழ்கிவிட்டன.  இவற்றில் பெரும்பகுதி இன்றும் கண்டெக்கப்படவில்லை.  இப்படி கடலடியில் கப்பல்கள் தேடியவர்கள் கட்டிடங்களை கண்டார்கள்.  நாகரிகங்களை கண்டறிந்து வருகிறார்கள்.

 “கடலடியில் நம் பாரம்பரியம் உள்ளதென்று பெருமை கொள்கிறோம்! 4000 ஆண்டுகளில் மூழ்கிய நகரங்களும் கப்பல்களும் நாம் கண்டெடுப்போம் என்று காத்துள்ளன.  சிந்து வெளி நாகரிக காலந்தொட்டு 7000 கிலோ மீட்டர் தூரம் நீண்ட இந்தியக் கடற்கரையை ஒட்டிய கடலடியில் பெரும் புதையல் காத்துக் கொண்டுள்ளது.  அங்கு தேடினால் 16 ஆம் நூற்றாண்டில் இருந்து மூழ்கிய கப்பல்களைக் கண்டுபிடிக்கலாம்.  1980 முதல்தான் இந்தியாவில் கடலடியில் அகழ்வாய்வு சூடு பிடிக்கத் தொடங்கியது.  கோவாவில் உள்ள நேனஷல் இன்ஸ்டியூட் ஆஃப் ஓசியோனோகிராபி கடலடியில் கப்பல்களை தேடப்போய் குஜராத் அருகே துவாரகா நகரத்தையும் பூம்புகாரையும் கண்டுபிடித்தார்கள் என இந்திய அரசு தொல்லியல் துறையின் கடலடி அகழ்வாய்வு பிரிவு தலைவர் அலோஜ் திரிபாதி கூறியுள்ளார்.

நம் சேர சோழ பாண்டியரின் நாடுகள் மூழ்கடிக்கப்பட்ட வரலாற்றை  தேடிப் பார்க்க வேண்டாமா? தமிழக அரசே குமரிக்கண்டம் பற்றி கடலாய்வு செய்து நூலாக்கி உலகின் பிற பேரழிவுகளுடன் தமிழினமும் அழிந்தது என்று நம் நாகரிகத்தை நிலை நாட்ட வேண்டும்.

 நாம் குமரிக்கண்டம் என்பதை கோண்டுவானா பெருங்கண்டம் என மற்றவர்கள் அழைக்கிறார்கள்.  கோண்டுகள் மத்திய இந்தியாவில் வசிக்கும் பழங்குடிகள்.  அந்தப்பகுதியின் பாறைகளுக்கும் பிற கண்டங்களின் பாறைகளுக்குமான ஒப்பீடு காரணமாக கோண்டுவானா என்ற சொல் உருவாயிற்று.  அந்தக் கோண்டுவானா பற்றி  நூலெழுதியவர் டொனால்டு பிளான்.  அந்த ஆய்வேட்டில் கோண்டுவானா பெருங்கண்டமாகத் திகழ்ந்தது.  இன்று தென்பசிபிக் கடல் உள்ள பகுதியில் அக்கண்டம் அமர்ந்திருந்தது.  பூமத்திய ரேகை வரையும் அதையும் தாண்டி தென்துருவமும் வரையும் பரவி இருந்தது.  புது கண்டங்கள் உடைந்து சிதறிய துகள்களையும் குப்பைகளையும் இன்று பசிபிக் பெருங்கடல் என்று சொல்லப்படும் பகுதியில் துடைத்து எறிந்து விட்டு அங்கு வீற்றிருந்தது கோண்டுவானாப் பெருங்கண்டம் என்று கூறுகிறார்.
 பூமத்திய ரேகைக்கு எதிர்த்திசையில் லாராசியா என்ற சிறிய கண்டம் ஒன்றிருந்தது.  அந்நிலப்பரப்பே இன்று பெரிதாக வளர்ந்து பெரிதாகி வடஅமெரிக்கா ஆயிற்று.  கிழக்கில் எவ்வளவு தூரத்தில் என்று வரையறுத்துச் சொல்ல முடியா தூரத்தில் பால்டிகா என இன்னொரு சிறிய கண்டமிருந்தது.  அக்கண்டமே இன்றைய ஐரோப்பாவின் பெரும்பகுதியை உள்ளடக்கி நின்றது.

 ஆங்காங்கே எங்கிருந்தன எனச் சொல்லவியலாத இடத்தில் சிறுசிறு கண்டங்கள் இருந்தன.  அவை ஆசியாவுடன் பின்னாளில் இணைந்தன. 500 மில்லியன் ஆண்டுகள் முன்பு லாரன்சியாவும் பால்டிகாவும் மோதிக் கொண்டன.  இவை நிகழ்ந்த போது தென் துருவப் பகுதியில் நகர்ந்து இன்றுள்ள தென் அட்லாண்டிக் நோக்கி கோண்டுவானா நகர்ந்தது.  கோண்டுவானா என்ற பெரும்கண்டம் ஆப்ரிக்காவை தென்னமெரிக்காவை இந்தியாவை அண்டார்டிகாவை ஆசுதிரேலியாவை நியுஇனியாவை நியுசிலாந்தை உள்ளடக்கியதாக இருந்தது.  இன்று வேறு கண்டங்களுடன் ஒட்டியுள்ள பல பகுதிகள் அப்பெருங்கண்டத்திலிருந்து பிரிந்தவையே!
 
 மத்திய ஐய்ரோப்பா இத்தாலி பால்கன் தீபகற்பம் துருக்கி மத்திய கிழக்கு ஈரான் ஆகிய அனைத்தும் கோண்டுவானாப் பெருங்கண்டத்தின் பகுதிகளாக இருந்தன.  ஆக இந்தியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய கோண்டுவானா உடைந்து சிதறி இன்று ஏற்பட்டுள்ள பூமியின் கண்டங்கள் மட்டுமே நம் வரலாற்றை சொல்லிடாது! சிந்து வெளி அதழ்வாய்வை எத்தனைக் காலத்துக்குப் பேசிக் கொண்டிருப்போம்! சுதந்திர இந்தியாவில் நாம் என்ன கண்டுபிடித்தோம்? மேனாட்டார் தான் இன்னமும் நமக்கு ஆய்வு செய்யக் கற்றுத் தர வேண்டுமா?

2011ல் நாம் இருக்கிறோம்! அமெரிக்காவில் 1909 லேயே கடலடி அகழ்வாய்வு நடந்துவிட்டது.  1909 ஏப்ரல் 5 அரிசோனா மாகாண அரசிதழின் பதிப்பில் (அரிசோன கெசட்) வெளியான கட்டுரையில்  அரிசோனா மாகாணத்தை ஒட்டி கடலடியில் பெரும் பள்ளத்தாக்கு உள்ளது.  இது 8799 அடி ஆழமுடையது. உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்று என்று சொல்லி வந்தார்கள்.
 
 ஆனால் புதிதாக வேறோர் பள்ளத்தாக்கு திபெத்தில் இதற்கு போட்டியாக வந்தது.  அமெரிக்காவின் ஜியாகிரபி கமிட்டியும் கின்னஸ் உலக சாதனைப் புத்தகமும் கூட்டாக 1994 ல் சீன வசமுள்ள திபேத்தில் உற்பத்தியாகும் யார்லங் திசாங்போ நதியில் உள்ள பள்ளத்தாக்கு 17657 அடி ஆழமுள்ளதால் அதுவே உலகின் மிகப் பெரிய பள்ளத்தாக்கு என்று கூறிவிட்டார்.  இப்படி உலக அதிசயங்களுள் ஒன்று என்று இன்று தகுதி இழந்து விட்டது.  அரிசோனா கடலடியில் உள்ள பள்ளத்தாக்கு! அனால் இதே பள்ளத்தாக்கில் 1909 ல் கல்லில் மனிதனால் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் எகிப்திய கடவுட் பதுமைகளின் சிலைகள் பதப்படுத்தப்பட்ட “மம்மிக்கள்” கண்டெடுக்கப்பட்டன.  நூறு ஆண்டு முன் அமெரிக்காவில் நடந்தது 100 ஆண்டு கடந்தும் இந்தியாவில் நடக்கவில்லை.

 பூம்புகார் தொடர்பாக மிகச் சில நாட்களே நடந்த ஆய்வையே இன்னமும் நான் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.  நம் வங்காள விரிகுடாக்கடல் 2172000 கி.மீட்டர் பரப்புடைய கடலாகும்.  கண்டங்களின் சுழற்சிக் கோட்பாட்டின்படி இந்தியாவையும் ஆசுதிரேலியாவையும் உள்ளடக்கிய பெருந்தட்டு வங்காள விரிகுடாக் கடல் தரைக்கு கீழே உள்ளது.  இதில் உடைப்பு ஏற்பட்டு இந்தியத் தட்டு வடக்கு நோக்கி மௌள நகர்கிறது.  சுந்தா பள்ளம் என்று சொல்லப்படும் கடற்பள்ளம் உள்ள இடத்தில் இந்தியத்தட்டும் மயன்மார் அமர்ந்துள்ள தட்டும் சந்திக்கின்றன.  ஒரே தட்டு மீது உட்கார்ந்திருந்த இந்தியாவும் ஆசுதிரேலியாவும் – கன்னியாகுமரிக்கு தெற்கே 960 கி.மீட்டர் தூரத்தில் தட்டு உடைந்து ஆசுதிரேலியா கழன்று செல்கின்றது.  இந்தியா வடக்கு நோக்கி நகர்கிறது.  அந்தப்பிளவில் ஒரு காலத்தில் மூழ்கிய தமிழ்நாட்டின் ஒரு பகுதி மீண்டும் மேலெழுப்பலாம்!

 இந்தியா- மயன்மார் பிளவு பெரிய பிளவின் பக்க விளைவு.  அந்தமான் நிகோபார் அருகில் உள்ள சுந்தா பள்ளம் அருகே இந்தியத் தட்டும் மயன்மார் தட்டும் மோதிக் கொள்கின்றன.  அப்போது இந்தியத் தட்டு தாழ்ந்து அதன்மேல் மயன்மார் தட்டு ஏறி அமர்ந்து கொள்கிறது.  மயன்மார் தட்டு மேலே ஏறி உட்கார்வதால் ஏற்படும் அழுத்தம் காரணமாக இந்தியத் தட்டு கீழே போகிறது.  இந்த உரசல்களால் சுநாமி உருவாகி வருகிறது.  கடற்பள்ளங்களும் பள்ளத்தாக்குகளும் உருவாகின்றன.  இந்தியத் தட்டு வடக்கு நோக்கி நகர்வதால் கடற்கரை மாறுகிறது.  கடலரிப்பு நேருகிறது.  கடலில் கண்முன்னே பல பகுதிகள் மறைந்து விடுகின்றன.  காலங்காலமாக நம் ஆறுகள் கொண்டு வந்து கொட்டும் வண்டல் மண் நம் பழம் நகரங்களையம் நாகரிகத்தையும் மூடுகின்றன. 

மூடிய இடங்களில் புதையுண்ட வரலாற்றை சென்னையில் உள்ள கடற்சார் பல்கலைக்கழகமும் அண்ணா பல்கலைக்கழகமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகமும் கூட்டாக இணைந்து தேடிக் கண்டெடுத்து புதிய செய்திகளை வெளிக் கொணர வேண்டும்.

 வங்கக்கடலில் உள்ள கடற் பள்ளத்தாக்குகளில் வடக்கு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கு பற்றி இந்திய அறிவியல் கழகம் 2008 ல் வெளியிட்ட நூலில் வீ. சுப்பிரமணியன் கே.எஸ்.கிருஷணா எம்.வி.ரமணா கே.எஸ்.ஆர்.மூர்த்தி ஆகியோர் கூட்டாக எழுதிய கட்டுரையில் “வடக்கு வங்கக்கடலில் வடகிழக்கு – தெற்கு தென்கிழக்கு திசையில்  300 மீட்டர் ஆழமும் 18 கிலோ மீட்டர் விரிவும் கொண்டு படிப்படியாக சரிவுகளுடன் பள்ளத்தாக்கு உள்ளதைச் சொல்கின்றனர்.  கடல் தரையின் ஆழம் சில இடங்களில் 900 மீட்டரில் இருந்து 1459 மீட்டர்களாக உள்ளது.  கடற் பள்ளத்தாக்கின் இருபுறமும் 100 – 150 மீட்டர் கனமுள்ள இயற்கைக் கழிவுகளும் தாதுக்களும் மூடியுள்ளன.  10 முதல் 20 மீட்டர் வரை கொப்புளம் போல கடலின் தரை மேலெழும்புவதால் இவ்வாறு பள்ளத்தாக்கின் இருபுறமும் 100 மீட்டர் முதல் 150 மீட்டர் வரை எதுவோ மூடியுள்ளது!! ஆக அறிஞர்கள் வங்கக்கடலில் பள்ளத்தாக்குகள் பற்றி சொல்லி விட்டார்கள்.  அதற்குள் நம் வரலாற்றை நாம் தேடியாக வேண்டும்.
 
 நம் தமிழகத்தின் கடற்கரை ஒட்டிய கடலின் நிறம் நீலமாக தெரிந்து பிறகு கருமேகம் சு10ழ்ந்தது போல காட்டப்படுவது கடற்பள்ளத்தாக்கு ஆகும்.  புதுச்சேரி கடற்கரையில் இருந்து 40 கி.மீ தூரத்தில் கடலடியில் எரிமலை வெடித்து 1857 ல் பள்ளத்தாக்கு உருவாகிவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சிந்து சமவெளி அகழ்வாய்வு பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்! அடுத்தடுத்த சான்றுகளை அகழ்வாய்ந்து தர இன்றுள்ள இந்திய நிலப்பரப்பில் தேடிக் களைத்து விட்டோம்! கடலில் அல்லவா ஒளிந்து கொண்டுள்ளது நம் வரலாற்றுப் புதையல்! கடலடியில் தேட வேண்டிய கடமை நமக்கல்லவா உள்ளது.   ஆனால் அறிவுலகம் ஏற்கும் சான்றுகள் இன்றும் ஆழத்தில் இன்னமும் தொலைவில் அகப்படும் என்று முதல் அடி எடுத்து வைத்த கிரகாம் ஹான்காக்கை வரவழைத்து சிறப்பிப்போம்! அவர் துணையோடோ நாமோ அவர் தொட்ட பணியை தொடருவோம்.

 தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தபோது நடந்த உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது குமரிக்கண்டம் பற்றிய குறும்படம் தயாரானது.  அது இருக்குமிடம் தெரியவில்லை.  மீண்டும் படமல்ல தேவை! வரலாற்று புதையலை தோண்டி உண்மைகளை முத்தாரம் போலத் தொகுத்து உலகுக்கு குமரிக்கண்டம் பற்றிச் சொல்ல ஆவணப்படம் எடுக்க வேண்டும்.

 பேசியது போதும்! செயலில் காட்டுவோம் செந்தமிழ் நாகரிகத்தின் சிறப்பை! செம்மொழி தமிழன் 10000 ஆண்டு வரலாற்றை!

தமிழ் வளர்ச்சிக்குப் புதுவையின் பங்களிப்பு

புதுவைப் பல்கலைக்கழ்க சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலம் தமிழ் வளர்ச்சிகுப் புதுவையின் பங்களிப்பு என்ற தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் 26.03.2011 சனிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் புல முதன்மையர் ஆரோக்கியநாதன் தலைமையில் தமிழ்மாமணி நா.நந்திவர்மன், பொதுச் செயலாளர் திராவிடப் பேரவை நிறைவுரை ஆற்றினார்..முனைவர் மு.கருணாநிதி நன்றியுரை ஆற்றினார்.

Debate in net on this symposium brought responses from France, which is reproduced below with my follow-up mails :

Dear Mr.Nandhi Varman,

 Thank you for this information. Usually, people are repeating things already known since the British period, let us say the 1910’s, and told by others too on similar occasions. We know already about Barathiyar (one Tamijar having lived in Pudhucchery 1908-1918), Barathidasan, VaNidasan, and some contemporary others who came in the last decades to live in Pudhucchery, though we need recall all this to some young students in Tamil social studies.

 I am eager to know whether there has been deep research about the poets/authors native of Pudhucchery who lived in 17th, 18th, 19th centuries. Mayilai Seeni and few others have written about them though very briefly and there could be some more too.  

Of course, Anandarangappillai is the first prose writer and paved the way to the first proto-historians in Tamil. But our governments, States and Central, do not know him well and may be refuse to have a correct picture of him. Otherwise, he would have had his stamp on his Tercentenary, on March 30th 2009 or even on the same date last 2010. We won’t be there for his 400th centenary, but I hope Tamijars would have well realizedby then that he was not only the close courtier of the French (there were so many in other communities for the British, the Portuguese, the Dutch and the Danes) but also a great literary author of 18th century.  

If your lecture had given new hints to the University students and ignited their curosity, it is indeed a very useful service to Tamils and Tamil literature.

Note: Due to political bias, unfortunately there is no Standard Tamil font until now and I am sorry to use English for this exchange with you.   

Wishing you good health for continuing your service to Tamil,

 anbuDan,

M.Gobalakichenane

 Dear Mr.Gopalakrishnan          Dear Mr Arokianathan            Dear Dr.Vijayavenugopal  Dear Dr.Bhakthavatsala Bharathy Thiru Sinnathurai Srivas  Thiru Ravi Rao

 I have always tried my best to say new things whenever I get chances to speak.  My endowment speech in International Institute of Tamil Studies is attached. Though a book was released on the same subject written by me I ensured at least speech varies incorporating what had not been written. Power Point presentation explaining the book is attached

 Unnecessarily a High Court opened the topic that Dravidians are not sons of the soil. It appeared in The Hindu. My rejoinder to that judgment is available in net. That file I am enclosing. Recently spoke in Tamil Department of Puducherry University. Since Dr.Sammandam of School of International Studies was about to preside I thought of preparing a booklet containing my paper in the Seminar organized by School of International Studies titled Colonization-De-Colonization and Re-Colonization and few articles I wrote in New Indian Express pertaining to Puducherry. That unfinished draft booklet is enclosed.

These are proofs to say that I am not repeating like parrots what I memorized during college days and vomiting in every given opportunity. I don’t get frequent chances to prepare new papers. Dr.Ilamathy Janakiraman my sisters friend used to say that someone must do at least an M Phil on what I have written. A magazine Editor from Canada asked me to contribute an article for a book which he wanted to compile and publish. I wrote Nagas are Dravidians, which is yet to be published by him for past 5 years. I have put it in net. That one too I am enclosing.

 I am also marking copy to my scholarly friend in London Avarangal Sinnathurai Srivas and Dr.Ira Mathivanan Director of Tamil Etymological Project not to boast about me but to link you all to involve in his net community aimed at proving scientifically the antiquity of Tamil. I also introduce you Ravi Rao, a lawyer who is an etymologist whose articles in net have been read by more than 3 lakh people, who proves Tamil language’s greatness treading the path of Devaneya Paavanar. He can write in English, Tamil, Malayalam, Kannada and Telugu proving Tamil as primary classical language of the world. Copy goes to novelist Nagarathinam Krishna who lives in France.

 Let few Tamils join the community of Sinnathurai Srivas and in net deliberate of our past and how to establish our Tamils glory scientifically.

 N.Nandhivarman

 Dear Friends

The article on Nagas is in this book. I prepared this book for International Institute of Tamil Studies for publication. But due to various reasons it could not be done. No other publisher came forward nor do I have money to publish on my own. Please read the articles, and there are few in Puducherry who can write like this. Puducherry should have honoured Dr.Eva Wilden of Ecole Francaise Extreme de Orient and Dr.Jean Delauche with Tamilmaamani award or recommended their names to Padmasri award which one Oriya had obtained in Puducherry quota and was about to go to a dancer this year.  

Scholars from other countries who do great service to Tamil are neglected by our institutes.

 N.Nandhivarman

Nandhi Varman to chinnaya47, gvgopal_710, bharathianthro, Madhi, ravivararo, Gobalakichenane, Nagarathinam

Mar 29 2011

http://www.araichchi.net/kanini/unicode/Ohm/Tamil_ohm.html

http://www.araichchi.net/pirappidam/PoA.html

http://en-gb.facebook.com/people/Sinnathurai-Srivas-Avarangal/764516949

http://www.eaglefonts.com/tsc-avarangal-italic-ttf-38130.htm

http://www.tscii.org/Fonts%20and%20Utilties/Documents/ekalappai.htm

http://nandhivarman.wordpress.com/2011/01/22/messiahs-of-new-age-unite/

http://nandhivarman.blogspot.com/2011_01_01_archive.html

  http://groups.google.com/group/tamil_wiktionary/topics?gvc=2&pli=1

https://groups.google.com/group/tamil_wiktionary/browse_thread/thread/a87ae656f3094520?hl=it#

TAMILISH SPEAKERS and TRANSLATION MACHINE

Former President of India A.P.J.Abdul Kalam on 30 th March 2011 launched in Hyderabad Sampark Machine Translation systems for Indian languages. Sampark Translation machine can now translate from Punjabi to Hindi, Hindi to Punjabi, Urdu to Hindi and Telugu to Tamil. This was reported in page 10 of The Hindu dated April 3 of 2011 with pride proclaiming basic version translates 4 Indian language pairs. Though happy about the technological progress I am also sad that my mother tongue Tamil is lacking behind in this innovation in spite of Tamils far ahead of others in Information Technology. May be they were busy in looking for good pastures abroad to satiate their desires to earn more and more and forgot Tamil for a moment. Or those Tamils left the burden to develop Tamil on the shoulders of Eelam Tamils. We only speak Tamilish and with English in our lips we block Tamil spring from our brain, by saying so these Tamils may excuse themselves from their inborn duty to develop Tamil.

Director of the International Institute of Information Technology Hyderabad which accomplished this remarkable invention under Technology Development for Indian Languages programme of the Department of Information Technology till now headed by a Tamilian and DMK Minister A.Raja. A real DMK leader would have seen that Tamil achieves this feat in first place, alas another opportunity lost to Tamil when our representative was busy with money machines forgetting to develop translation machine for Tamil. As consolation to Tamils, the newspaper reports that within a year Tamil-Hindi, Telugu-Hindi, Hindi-Urdu, Kannada-Hindi, Punjabi-Hindi, Marathi-Hindi, Bengali-Hindi, Tamil-Telugu, and Malayalam-Tamil translation by machine will be made possible.

IIT Mumbai and Kharagpur, C-DAC Noida UP and Pune in Maharashtra, University of Hyderabad .Jadhavpur University, Anna University-KBC Centre, Tamil University, IIIT Allahabad, and IISc Bengaluru etc are involved in this project where 200 researchers have been toiling since 2006.

Anna University- KBC [Kumbakonam B.Chandrasekar] Centre had launched online Tamil dictionary in www.akaraadhi.com which even the research scholars of International Institute of Tamil Studies just within a kilometer distance were not aware, I found out while interacting with scholars at the time of my speech there. Tamils know Google search engine but don’t know that KBC Centre invented first Tamil search engine Kazhugu about which Indian Express reported 6 years ago. Now in yesterday’s The Hindu which Tamils buy daily news had appeared on Translation machine, let them touch their conscience and ask how many of them read this or tried this. If Tamil doctorate holders imagine they have scaled the highest peak in their career let them recall Ayyaiyar whose golden words reminds them to know in Tamil related technological developments and train their students in its usage.

Having issued sermon these scholars, you would ask what you had done. My research paper in English was translated by machine in Russian, Greek, Spanish, Portuguese, Dutch, French, German and Arabic. It should be borne that machine translations are not perfect and it will take a decade to achieve perfection, but I had made an attempt. I might have faltered in my steps but nevertheless I attempted. Aringnar Anna used to often say ‘ I know my height “, similarly I am not a scholar but always a student in Tamil. Let Tamil scholars/ Tamil Researchers at least read in what direction wind in blowing in Information Technology field and in which way our students can enrich their knowledge.

N.Nandhivarman

General Secretary Dravida Peravai

4.4.2011

TO FOSTER TAMIL-CHINESE LANGUAGE TIES…

Tamil – Chinese interaction spans through many centuries. Pan Kou, a poet from China in the first century AD says that China had relations with Kanchi in the second century BC. Fa-Hien (401-10 AD) describes a huge monastery in Dakshina, probably in Kanchi or at Nagarjunakonda. Later Wei dynasty king received an ambassador from Tamil Nadu. Yuan Chwang was in the Royal court of Mahendra Pallavan of Kanchi. I-Tsing was in a ship which came to Nakappattinam. Narasimman of Kanchi sent an ambassador to China and also built a Vihara for the Chinese in Tamil Nadu. Rajarajan built a Vihara for the Chinese in Nakappattinam. Chau Ju-Kua says that Chola country had been trading with China for ages. A late thirteenth-century bilingual Tamil and Chinese-language inscription has been found associated with the remains of a Siva temple of Guangzhou. This was one of possibly two south Indian-style Hindu temples that must have been built in the southeastern sector of the old port.

http://www.visvacomplex.com/Tamil_Inscription_Of_China.html

 Here is a new dimension to the age old Tamil – Chinese ties. From the Tamil New Year and Thai Pongal day, all the 18,266 hymns of Thirumurai can be read in Chinese Pinyin due to the efforts of these scholars. 1. Dr. Punal K. Murugaiyan, Tamil Linguist, Chennai, 2. Dr. Goh Yeng Seng of the National Institute of Education, Nanyang Technical University, Singapore, 3. Dr. R. Sivakumaran of the National Institute of Education, Nanyang Technical University, Singapore, 4. Mr. V. Vinothrajan, Computatonal Linguistics Programmer, Chennai. This effort is their contribution in furthering and enhancing Tamil – Chinese relationships. Many persons of Chinese origin, now in Singapore and Malaysia recite thirumurai and are practicing as singers. , ppalania@my.hellmann.net>, , This effort in transcription is to support those singers and the globalised Chinese community in delving into Tamil songs.

I am pleased to share this news with you on this day, having coordinated these efforts in transcription for the past 12 months.

Thanking you.

Maravanpulavu Sachidanandam

UNICODE CONSORTIUM DONT DESTROY TAMIL

The philosophy behind Tamil alphabet is drastically different from Grantham nor Devanagari. Tamil alphabet represents Places of Articulation. Then defines the mechanics behind creating sounds/phonemes. Grantham (alphabet) represents sounds/phonemes, (which is highly restricted in scalability), but emphasises on some funky phonemes. Devanagari (alphabet) also represents sounds/phonemes.

The aim of Indian government is to eventually eliminate the only scientific writing system from the world, stems from political and racial reasons. Tamil is the only surviving Indic writing system. The world, the technocrats, scientists, the Unicode Consortium, the minority rights groups and other world organisations should come to the help to save Tamil alphabet from destruction, deliberate misinterpretation.

Unicode consortium should make an effort to understand Tamil alphabet system before making drastic changes to it. They should understand that these are not technical attempts but racial attempts to destroy Tamil writing system.

 Sinnathurai Srivas

in tamil aaraichi egroup